Tamilnadu
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நாளை நடைபெறவுள்ள விழுப்புரம் மாவட்ட அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக விழுப்புரம் செல்லும் வழியில் இன்று (27.1.2025) ஒலக்கூரில் உள்ள வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, முதலமைச்சர் அவர்கள், சுகாதார நிலையத்தில் உள்ள காய்ச்சல் சிகிச்சை பிரிவு, கர்ப்பிணிகள் பரிசோதனை பிரிவு, அறுவை சிகிச்சைக்குப்பின் கவனிப்பு பிரிவு போன்றவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், பணியாளர்களின் வருகைப் பதிவேடு, உள் மற்றும் புறநோயாளிகள் சிகிச்சை விவர பதிவேடுகள், மருந்துகள் இருப்பு பதிவேடு போன்றவற்றை முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து, அதன் விவரங்கள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
மேலும், முதலமைச்சர் அவர்கள், டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு நிதியுதவி திட்டத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் நிதியினை தவணை தவறாமல் வழங்குவதையும், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை உரிய நேரத்தில் வழங்குவதையும் மருத்துவர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
அத்துடன், சுகாதார நிலையத்தை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும் என்றும், தினமும் சுமார் 300 நோயாளிகள் வருகை தரும் இந்த சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சைகளை காலதாமதமின்றி வழங்கிட வேண்டும் என்றும், அத்தியாவசிய மருந்துகள் தேவையான அளவிற்கு இருப்பு வைத்திருப்பதை உறுதி செய்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
Also Read
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!