Tamilnadu
குடியரசு தின விழா : ஆளுநர் முன்பு கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாடு அரசின் சாதனை ஊர்திகள்!
நாடு முழுவதும் இன்று 76-வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் நடந்த குடியரசு தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தேசியக் கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர், ராணுவம், கடற்படை, விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து, வீர தீரச் செயலுக்கான அண்ணா பாதக்கம் விருது, கோட்டை அமீர்மத நல்லிணக்க விருது, சி.நாராயணசாமி நாயுடு விருது, காந்தியடிகள் காவலர் பதக்கங்கள் விருது, சிறந்த காவல் நிலையத்திற்கான முதலமைச்சரின் விருதுகளை, முதலமைச் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
பிறகு பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் பஞ்சாப், காஷ்மீர் மாநிலங்களி பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளும் அரங்கறப்பட்டன. இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க அலங்கார ஊர்த்திகள் அணிவகுத்து சென்றனர்.
இதில் பள்ளிகல்வித்துறை, விளையாட்டுத்துறை, இந்துசமய அறநிலையத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளின் சாதனைகளை விளக்கி கம்பீரமாக அலங்கார ஊர்த்திகள் அணிவகுத்து சென்றன.
Also Read
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!