Tamilnadu

”மாமிசத்திற்கும்,கழிவிற்கும் வித்தியாசம் தெரியவில்லை” : தமிழிசைக்கு பதிலடி கொடுத்த செல்வப்பெருந்தகை!

இந்தியாவில் பா.ஜ.க. ஆட்சி வந்ததில் இருந்தே, இந்துத்துவ சிந்தனைகளை மக்கள் மீது திணிக்கும் வேலைகளை தொடர்ந்து செய்து வருகிறது. அதில் முதற்படியாக 'மாடு'. மாட்டை வைத்து அரசியல் செய்வது என்றால் அது பா.ஜ.க. மட்டும்தான். மாட்டை கடவுளாக பாவிக்க வேண்டும், மாட்டு சாணி மருத்துவ குணம் நிறைந்தது, கோமியத்தை குடித்தால் நோயெதிர்ப்பு சக்தி உருவாகும் என பல மூட நம்பிக்கைகளை மக்கள் மனதில் விதைக்க முயன்று வருகிறது.

இப்படி இருக்கையில், மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என்றும், அதனை தடை செய்ய வேண்டும் என்றும் இந்துத்துவ கும்பல் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அது மட்டுமின்றி, மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள் தேச விரோதியாக கருதி வெறுப்பு பிரச்சாரத்தையும் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் அண்மையில் சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி, தனது தந்தை மாட்டு கோமியம் குடித்த 15 நிமிடங்களில் காய்ச்சல் குணமானதாகவும், மாட்டு கோமியத்தில் Anti Bacterial, Anti Fungal, Anti Inflammatory போன்ற மருத்துவ குணம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளதற்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது

இதற்கிடையில், ”பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை எவுந்தரராஜன், மாட்டுக்கறியை மட்டும் சாப்பிடுவீங்க ஆனா, கோமியத்தை குடிக்க மாட்டீங்களா?” என ஐஐடி இயக்குனர் காமகோடியின் பேச்சுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து தமிழிசை எவுந்தரராஜன் கருத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பதிலடி கொடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில்,”ஆங்கிலத்தில் மருத்துவம் பயின்ற தமிழிசை சவுந்தரராஜனுக்கு மாமிசத்திற்கும், கழிவிற்கும் வித்தியாசம் தெரியாதது மிகப்பெரிய கொடுமை.

ஆயுர்வேதத்தில் இருக்கிறது என்பதால், கண்ணை மூடிக்கொண்டு அனைத்தையும் நம்ப வேண்டுமா?.மாட்டின் கழிவு நீரான சிறுநீரை அமிர்தநீர் என்று பா.ஜ.கவில் உள்ளவர்களால்தான் சொல்லமுடியும். இவர்கள் இவ்வாறு சொல்லாவிட்டால்தான் அதிசயம்.

இதுபோன்ற அமிர்தநீர் ஆராய்ச்சி கொண்ட கருத்துகளை இவர்கள் வெளிநாடுகள் செல்லும் போது சொல்லமுடியுமா?. வடநாடுகளில், மாட்டை வைத்து அரசியல் செய்து, ஆதாயம் தேடியது போல இங்கேயும் மாட்டரசியல் செய்ய வேண்டாம்" என தெரிவித்துள்ளார்.

Also Read: 14 வகை பாக்டீரியாக்கள்... “மாட்டு கோமியம் குடிச்சா இதான் நிலைமை..” - இந்திய கால்நடை ஆய்வு எச்சரிக்கை !