Tamilnadu

முடிவடைந்தது சென்னை மலர் கண்காட்சி : 1 லட்சத்துக்கும் அதிகமானோர் கண்டுகளிப்பு !

தமிழ்நாடு அரசின் தோட்டக்கலை மற்றும் மலைப் பெயர்கள் துறை சார்பாக நான்காவது ஆண்டாக மலர் கண்காட்சியை செம்மொழி பூங்காவில் கடந்த இரண்டாம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தொடர் விடுமுறையின் காரணமாக இந்த மலர்கண்காட்சிக்கு ஏராளமானோர் வருகை தந்தனர். இந்த மலர் கண்காட்சி இன்றுடன் முடிவடையும் சூழலில் இறுதி நாளான இன்றைய தினம் ஏராளமான பொதுமக்கள் மலர் கண்காட்சியை காண ஆர்வத்துடன் வந்தனர்.

பொதுமக்கள், குடும்பம் குடும்பமாக குழந்தைகளுடன் பொதுமக்கள் நேரில் வந்து பல்வேறு வகையான வண்ண மலர்களை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர்.பல்வேறு வகையான மலர்களைக் கொண்டு மயில், வண்ணத்துப்பூச்சி உள்ளிட்ட பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது பார்ப்போரை வெகுவாக கவர்ந்தது.

நாள்தோறும் வேலை பழுவிற்கு இடையில் இதுபோன்று மனதிற்கு இயற்கையான சூழலை பார்ப்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி என மலர் கண்காட்சியை பார்க்க வந்த பொதுமக்கள் தெரிவித்தனர். இந்த மலர் கண்காட்சியை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளதாக துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Also Read: பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பொதுமக்கள்: பேருத்து இயக்கத்தை கண்காணிக்க அலுவலர்கள் நியமனம்!