தமிழ்நாடு

பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பொதுமக்கள்: பேருத்து இயக்கத்தை கண்காணிக்க அலுவலர்கள் நியமனம்!

சென்னையில் பேருத்து இயக்கத்தை கண்காணிக்க அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பொதுமக்கள்: பேருத்து இயக்கத்தை கண்காணிக்க அலுவலர்கள் நியமனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பொங்கல் பண்டிகை மற்றும் தமிழ் புத்தாண்டு தொடர் விடுமுறையை ஒட்டி கடந்த 10 முதல் 13ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. இந்நிலையில் இன்றுடன் தொடர் விடுமுறை முடிவடையும் நிலையில் சென்னை நோக்கி மக்கள் தங்கள் பயணத்தை தொடங்கியுள்ளனர்.

இன்று மாலை முதல் நாளை நள்ளிரவு வரை பொதுமக்களின் வசதிக்காக அனைத்து ஊர்களில் இருந்து சென்னைக்கும், பிற முக்கிய நகரங்களுக்கு தமிழ்நாடு அரசு மற்றும் போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அந்த வகையில் பொங்கல் திருநாளை முன்னிட்டு, கடந்த 10.01.2025 முதல் 13.01 2025 ஆகிய 4 நாட்களில் சென்னையிலிருந்து தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் 7,498 சிறப்பு பேருந்துகள் மொத்தமாக 15 .866 பேருந்துகள் இயக்கப்பட்டு, 6.73 இலட்சம் பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

பொங்கல் திருநான் முடிந்த பின்னர் பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு வரும் பயணிகளின் வசதிக்காக 15.01.2026 முதல் 19.01.2025 வரையில் தினசரி இயக்கக்கூடிய 2092 பேருந்துகளுடன் 8.290 சிறப்புப் பேருத்துகளும், ஏனய பிற முக்கிய ஊர்களிலிருந்து 6.926 பேருத்துகளும் என ஆக மொத்தம் 22670 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பொதுமக்கள்: பேருத்து இயக்கத்தை கண்காணிக்க அலுவலர்கள் நியமனம்!

சென்னையின் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் , கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் மாதவரம் பேருந்து நிலையம் ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து சென்னையின் பிற பகுதிகளுக்கு செல்ல மாநகர் போக்குவரத்து கழகம் மூலம் உடனுக்குடன் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்று தினமும் இயக்கப்படும் பேருத்துகளுடன் கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படும் எனவும், மேலும் நாளை கிளாம்பாக்கத்தில் (KCBT) பயணிகள் அதிகம் வருவார்கள் என எதிர்பாக்கப்படுவதால் அதிகாலை முதல் கூடுதலாக 500 பேருந்துகள் கிளாம்பாக்கம் (KCBT) பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படவுள்ளது

மேலும் இன்று பிற்பகல் முதல் நாளை வரை பயணிகளின் கூட்ட நெரிசல் குறையும் வரை கிளாம்பாக்கம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையம், பூந்தமல்லி, கோயம்பேடு, ஆகிய முக்கிய பேருந்து நிறுத்தங்களில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பேருத்து இயக்கத்தினை கண்காணித்திட உத்தரவிடப்பட்டுள்ளது

banner

Related Stories

Related Stories