Tamilnadu
”UGC-யின் புதிய விதிமுறைகளை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும்” : திமுக மாணவர் அணி எச்சரிக்கை!
UGC - யின் புதிய விதிமுறைகள் என்ற பெயரில் கல்வி உரிமையையும், சமூக நீதியையும் அழிக்கத் துடிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசை கண்டித்து தமிழ்நாடு மாணவர்கள் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் இன்று போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தின் போது செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் "மாணவர்களுக்கு எதிரான சட்டங்களை ஒன்றிய அரசு தொடர்ந்து திணிக்கிறது. தேசிய கல்வி கொள்கை என்ற புதிய சட்டத்தை உருவாக்கி சாமானியனுக்கு வழங்கப்படக்கூடிய கல்வி உரிமையை பறிக்க வேண்டும் என்பதற்காகவும் சுய சிந்தனையையும், சுயமரியாதையையும், விடுதலையையும் வழங்கி இருக்கக்கூடிய கல்வியை பறித்தால் ஆரிய கூட்டம் மீண்டும் ஆட்டம் போடலாம் என கருதுகிறது.
தேசிய கல்வி கொள்கை என்ற பெயரால் பள்ளியிலே மாணவர்களை படிப்பை நிறுத்தி விட வேண்டும் என 3, 5, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வுகளையும், கல்லூரிகளிலும் பல வகையில் கல்விக்கு தடை போடுகிற செயலை ஒன்றிய பா.ஜ.க செய்து கொண்டிருக்கிறது.
தற்போது UGC - யின் புதிய விதிமுறைகள் என்ற பெயரில் கல்வி உரிமையையும், சமூக நீதியையும் ஒன்றிய பா.ஜ.க அரசு அழிக்க துடிக்கிறது. பல்கலைகழக உரிமையை எப்போதும் விட்டுக்கெடுக்கமாட்டோம். இந்த போராட்டம் அதற்கு ஒரு தொடக்கம்.UGC- யின் புதிய விதிமுறைகள் திரும்பபெறவில்லை என்றால் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் தொடரும்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
‘பெரியார் விருது’ பெறும் கனிமொழி எம்.பி! : தி.மு.கழக முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு!
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !