Tamilnadu
பேரறிஞர் அண்ணா மாரத்தான் போட்டி : தேதி முதல் பரிசு வரை... விதிமுறைகள் என்னென்ன? - முழு விவரம்!
2024 -2025 ஆம் ஆண்டிற்கான பேரறிஞர் அண்ணா மாரத்தான் போட்டிகள் சென்னை மாவட்ட அளவிலான பேரறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டிகளை 10.01.2025 அன்று காலை 05.30 மணி அளவில் நடத்தப்படவுள்ளது என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியான செய்தி குறிப்பு வருமாறு :
2024 -2025 ஆம் ஆண்டிற்கான விளையாட்டுத்துறை மான்ய கோரிக்கை எண் : 49ல் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்களால் “அன்றாட வாழ்வில் உடற்தகுதியை பேணுவது குறித்து விழிப்புணர்வை பொதுமக்களிடயே ஏற்படுத்துவதற்கு, உடற்தகுதி கலச்சாரத்தை இளைஞர்களிடையே புகுத்துவதற்கு சென்னை மாவட்டத்தில் மாரத்தான் போட்டிக்கு இணையான பேரறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டி ஆண்டுதோறும் நடத்தப்படும்” என 11.04.2023 அன்று அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான பேரறிஞர் அண்ணா மாரத்தான் போட்டிகள் சென்னை மாவட்ட அளவிலான பேரறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டிகளை 10.01.2025 அன்று காலை 05.30 மணி அளவில் சென்னை சுவாமி சிவானந்தா சாலையில் உள்ள தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையம் அருகில் துவங்கி நேப்பியர் பாலம், தீவுத்திடல், காயிதே இ மில்லத் பாலம் இடதுபுறம் அண்ணா சாலை வழியாக சென்று மீண்டும் சுவாமி சிவானந்தா சாலை தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையம் துவங்கிய இடத்திலேயே முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இப்போட்டிகள் கீழ் காணும் இரு பிரிவுகளில் நடத்தப்படவுள்ளது.
1.) 17 முதல் 25 வயதிற்குட்பட்டவர்கள் - ஆண்கள் : 8 கி.மீ. - பெண்கள் : 5 கி.மீ.
2.) 25 வயதிற்குமேற்பட்டவர்கள் - ஆண்கள் : 10 கி.மீ. - பெண்கள் : 5 கி.மீ.
மாவட்ட அளவில் நடத்தப்படும் இப்போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடம் பெறுபவர்களுக்கு (2ஆண்கள் மற்றும் 2 பெண்கள்) வீதம் 4 நபர்களுக்கு ரூ.5000/-, இரண்டாம் இடம் பெறுபவர்களுக்கு ரூ.3000/- மூன்றாம் இடம் பெறுபவர்களுக்கு ரூ.2000/- மற்றும் 4 முதல் 10 இடங்களில் வருபவர்களுக்கு ரூ.1000/- பரிசும், தகுதிச்சான்றிதழ்களும் வழங்கி சிறப்பிக்கப்படும்.
இப்போட்டியில் பங்கு பெறும் வீரர் வீராங்கனைகள் அனைவரும் வயது சான்றிதழுடன் 30.12.2024 முதல் 07.01.2025 வரை, மாவட்ட விளையாட்டு அரங்கம், நேரு பூங்கா, சென்னை-84 காலை 06.30 மணிமுதல் மாலை06.00மணிவரை முன்பதிவுகள் செய்துக் கொள்ளலாம். மேலும்10.01.2025அன்று காலை 05.30 மணியளவில் சென்னைசுவாமி சிவானந்தா சாலையில் உள்ள தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையம் அருகில் துவங்கும் இடத்தில் சென்னை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் முன் அறிக்கை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முன்பதிவு செய்யாமல் நேரடியாக போட்டியில் கலந்துக்கொள்ள அனுமதி இல்லை. இது தொடர்பான இதர விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரிலோ அல்லது தொலைபேசியிலோ (7401703480) தொடர்பு கொண்டு விவரம் பெற்றுக் கொள்ளலாம்.
மேற்கண்ட செய்தி வெளியீட்டினை சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ/மாணவியர்கள்,பொது மக்கள் அதிகளவில் பயன்பெறும் வண்ணம் அணைத்து நாளேடுகளிலும் பரிசுரிக்க ஆவன செய்யுமாறு வேண்டி பணிந்து அனுப்பப்படுகிறது.
Also Read
-
தமிழக ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு.. சுற்றுச்சூழல் அனுமதியை திரும்ப பெற வேண்டும் - வைகோ வலியுறுத்தல்!
-
‘பெரியார் விருது’ பெறும் கனிமொழி எம்.பி! : தி.மு.கழக முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு!
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!