Tamilnadu
அண்ணா பல்கலை. மாணவி மீது பாலியல் அத்துமீறல் விவகாரம் : குற்றவாளிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் !
சென்னை அண்ணா பல்கலைக்கழக கிண்டி பொறியியல் கல்லூரி வளாகத்தில் 2-ம் ஆண்டு பயிலும் மாணவி ஒருவர், கடந்த டிச.24-ம் தேதி இரவு தனது ஆண் நண்பருடன் தனியாக பேசிக்கொண்டிருந்த சமயத்தில், அங்கு வந்த 2 மர்ம நபர்கள் அந்த மாணவனை தாக்கிவிட்டு, மாணவி மீது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவி ராஜா அண்ணாமலைபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கிய நிலையில், சிசிடிவி உள்ளிட்டவைகளை கொண்டும் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து 2 தனிப்படை கொண்டு குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், புகார் அளிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட குற்றவாளி ஞானசேகரன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றவாளி ஞானசேகரனுக்கு இடது கால் மற்றும் இடது கை எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால், அவர் இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்து மாவு கட்டு போட்ட பின்னர், சைதாப்பேட்டை நீதிபதி சுல்தான் ஹர்ஹான் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி குற்றவாளி ஞானசேகரனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிட்டார். இதனை அடுத்து குற்றவாளி ஞானசேகரன் அரசு ஸ்டான்லி பொது மருத்துவமனையின் கைதிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Also Read
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!