தமிழ்நாடு

”குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்” : மாணவி பாலியல் புகார் வழக்கில் அமைச்சர் திட்டவட்டம்!

குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என கிண்டி பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் குறித்து அமைச்சர் கோவி.செழியன் விளக்கம் கொடுத்துள்ளார்.

”குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்” : மாணவி பாலியல் புகார் வழக்கில் அமைச்சர் திட்டவட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை அண்ணா பல்கலைக்கழக கிண்டி பொறியியல் கல்லூரி வளாகத்தில் 2-ம் ஆண்டு பயிலும் மாணவி ஒருவர், நேற்று இரவு தனது ஆண் நண்பருடன் தனியாக பேசிக்கொண்டிருந்துள்ளார். அந்த சமயத்தில் அங்கு வந்த 2 மர்ம நபர்கள் அந்த மாணவனை தாக்கிவிட்டு, மாணவி மீது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து மாணவி ராஜா அண்ணாமலைபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கிய நிலையில், இரவு காவலாளி, சிசிடிவி உள்ளிட்டவைகளை கொண்டும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதனடிப்படையில் தற்போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என அமைச்சர் கோவி.செழியன் உறுதியுடன் தெரிவித்துள்ளார். இது குறித்து சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அமைச்சர் கோவி.செழியன்,”கிண்டி பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இது போன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க பல்கலைக் கழக அளவில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து உரிய முடிவுகள் எடுக்கப்படும் .

தனிப்பட்ட ஒரு மாணவி பாதிக்கப்பட்டுள்ள இச்சம்பவத்தை அரசியல் ஆக்க விரும்புகிறவர்கள் கடந்த ஆட்சியில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் அன்றைய ஆட்சியாளர்களின் அழுத்தத்தால் காவல்துறையில் புகார் அளிக்கக் கூட பாதிக்கப்பட்டவர்கள் பயந்தனர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். திமுக ஆட்சியில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெகு விரைவில் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories