Tamilnadu

தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்சனைக்காக ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய ராகுல் காந்தி!

தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண வலியுறுத்தி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

அதன் விவரம் வருமாறு:-

தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. மீன்பிடி படகுகளை இலங்கை அரசு பறிமுதல் செய்வதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

இந்தியா வருகை தந்துள்ள இலங்கை அதிபர் அநுரகுமார திசநாயகேவிடம் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் போது, மீனவர்கள் பிரச்சனையையும், தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை சிறையில் இருந்து முன்கூட்டியே விடுவிப்பது குறித்தும் கவனத்தில்கொண்டு ஒன்றிய அரசு விவாதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: ”மாநில உரிமைகளை நசுக்கும் மோடி அரசு” : மாநிலங்களவையில் திருச்சி சிவா MP குற்றச்சாட்டு!