Tamilnadu
“புதுமைப் பெண் திட்டத்தால் 2.30 லட்சம் மாணவிகள் பயன்... இது மிகப்பெரிய சமூக மாற்றம்” : தி இந்து பாராட்டு!
‘புதுமைப் பெண்' திட்டமானது 05.09.2022 அன்று சென்னையில் பாரதி மகளிர் கல்லூரியில் துவங்கப்பட்டது. டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் வருகை தந்திருந்தார்கள். மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர் கல்வித் திட்டமாக இது தொடங்கி வைக்கப்பட்டது.
அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர் கல்விச் சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் மகத்தான திட்டம் இது.
எந்த நோக்கத்துக்காக இது தொடங்கப்பட்டதோ அந்த நோக்கத்தை முழுமையாக அடைந்துள்ளது இந்தத் திட்டம். மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் புதுமைப் பெண் திட்டப்படி 4.81 லட்சம் மாணவிகள் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் பெறுகிறார்கள். குடும்ப சூழல் காரணமாக பணம் செலவு செய்ய முடியாத நிலை சில மாணவியருக்கு இருந்திருக்கிறது. ஓராண்டாக கல்லூரிக்குச் செல்லாத சில மாணவியர், இந்த திட்டத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு அதன்பிறகு கல்லூரியில் சேர்ந்துள்ளதாகப் பேட்டி அளித்துள்ளார்கள்.
கல்லூரி மாணவியரின் உயர் கல்விச் சேர்க்கையானது அதிகமாகி வருகிறது. அதுமட்டுமல்லாது, அரசாங்கமே ஆயிரம் ரூபாய் தருகிறது என்பதை தனது பெற்றோரிடம் சொல்லி அடம் பிடித்து இப்போது கல்லூரியில் பல மாணவியர் சேர்ந்துள்ளார்கள். இந்நிலையில் இதுகுறித்து தி இந்து ஆங்கில நாளேடு வெளியிட்டுள்ள கட்டுரையில், தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பயின்று, இடை நிற்றல் இன்றி உயர்கல்வி பயிலும் அனைத்து மாணவிகளுக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம் கடந்த 2022 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தற்போது இந்த திட்டம் குறித்து மாநில திட்டக்குழு நடத்திய ஆய்வில், 2 லட்சத்து 30 ஆயிரத்து 820 மாணவிகள் பயனடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. அதன் படி, மொத்தம் 38 மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், சென்னையில் 11 ஆயிரத்து 468 மாணவிகளும், சேலம் மாவட்டத்தில் 17 ஆயிரத்து 32 மாணவிகளும், நாமக்கல்லில் 13 ஆயிரத்து 312 மாணவிகளும், தர்மபுரியில் 11ஆயிரத்து915 மாணவிகளும் திருவண்ணாமலையில் 11 ஆயிரத்து 146 மாணவிகளும், கோவையில் பத்தாயிரத்து 777 மாணவிகளும் பயன்பெற்றதாக கூறப்பட்டுள்ளது.
புதுமைப்பெண் திட்டம் மூலம், உயர்கல்வியில் மாணவிகள் சேர்க்கை 34 சதவிதிகம் உயர்ந்துள்ளது. பள்ளி கல்லூரிகளில் இடைநிற்றல் மாணவிகளும் மீண்டும் உயர்கல்வி படிப்பில் சேர்ந்து கல்வியை தொடரும் நிலை உருவாகியுள்ளதாக, தி இந்து ஆங்கில நாளேடு பாராட்டு தெரிவித்துள்ளது.
இந்த புதுமைப்பெண் திட்டம் மூலம், மாணவிகள் தங்களுக்கு கிடைக்கும் பணத்தை கொண்டு, முதுகலை பட்டம், சிஏ உள்ளிட்ட உயர்கல்வி பயில்வதற்காக திட்டமிட்டு வருவதாகவும் இதுவே இத்திட்டத்தின் வெற்றி என்றும் தி இந்து ஆங்கில நாளேடு கூறியுள்ளது. ஒரு சில மாணவிகள், உயர்கல்விக்கு வழிக்காட்டும் புத்தகங்களை பெறுகின்றனர்.
ஆங்கில நாளேடு குறிப்பிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் புதுமைப்பெண் திட்டத்தால் உயர்கல்வி படிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் இது சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தி இந்து ஆங்கில நாளேடு பாராட்டு தெரிவித்துள்ளது.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!