Tamilnadu
கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் 18 மாதங்களில் 5,020 அறுவை சிகிச்சை! : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட சென்னை, கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை 18 மாதம் காலத்தில் 5,020 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு மாபெரும் சாதனை படைத்துள்ளது.
அதனை சிறப்பிக்கும் வகையில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்
திராவிட மாடல் ஆட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் 15.06.2023 அன்று சென்னை, கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை திறந்து வைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
இம்மருத்துவமனை தொடங்கப்பட்ட குறுகிய காலங்களில் (18 மாதங்கள்) 5,020 அறுவை சிகிச்சைகளும், 538 நரம்பியல் அறுவை சிகிச்சைகள், 1375 சிறுநீரக அறுவை சிகிச்சைகள், 512 பொது அறுவை சிகிச்சைகள், 1000த்திற்கும் மேற்பட்ட புற்றுநோய் அறுவை சிகிச்சைகள் மற்றும் 137 இருதய பைபாஸ் மற்றும் இதய வால்வு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும் 10 மாதத்தில் இருதயவியல் துறையில் 1,683 பேருக்கு ஆஞ்சியோகிராம், ஸ்டென்ட் மற்றும் பேஸ்மேக்கர் பொருத்தும் சிகிச்சைகள் நடைபெற்று சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் இன்று (12.12.2024) மருத்துவமனைக்கு வருகை புரிந்து, சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.
இந்த மருத்துவமனை குறுகிய காலத்தில் சிறப்புடன் செயல்படுவதற்கு காரணமாக உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.
Also Read
-
“மாற்றம் எனச் சொல்லி.. அண்டப் புளுகை, ஆதவ் அர்ஜுனா புளுகாக மாற்றிவிட்டார்களோ?” : இ.பரந்தாமன் கண்டனம்!
-
ஒரே நாளில்... கோவையை தொடர்ந்து மதுரை.. கொலை நகரமாகும் தூங்கா நகரம்... வேடிக்கை பார்க்கும் தவெக அரசு!
-
விபரீதமான விளையாட்டு... வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் 8 பள்ளி மாணவர்கள் கைது.. கள்ளக்குறிச்சியில் பரபர!
-
“ஒன்னு மின்வெட்டு, இரண்டு அரிவாள் வெட்டு.. இதான் தவெக ஆட்சி” : முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“வேங்கைவயல் விவகாரத்தில் நீலிக்கண்ணீர்... மன்னிப்புக் கேட்க தயாரா?” : வன்னி அரசுக்கு கோவி.செழியன் கேள்வி!