Tamilnadu

ஃபெஞ்சல் புயலுக்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பிய சென்னை மாநகரம்!

ஃபெஞ்சல் புயல் காரணமாக நவம்பர் 30 அன்று, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் மிக கனமழை பெய்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அந்த வகையில் டிராக்டர்கள் மற்றும் உயர்ரக மோட்டார்கள் கொண்டு சாலைகளில் தேங்கிய தண்ணீரை அகற்றும் பணியில் தீவிரமாக மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். மேலும் காற்றினால் சாய்ந்த மரங்கள், மரக்கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்றும் பணிகள் துப்புரவு பணியாளர்களும் தீவிரமாக ஈடுபட்ட உடனுக்குடன் அகற்றினர்.

மேலும் தமிழ்நாடு அரசின் போர்க்கால நடவடிக்கையின் அடிப்படையில் சாலைகள் உள்ள தண்ணீர் உடனடியாக அகற்றப்பட்டு சீரான நிலைக்கு திரும்பியது. மேலும் சுரங்க பாதைகள் உள்ள தண்ணீர்களும் உடனடியாக அகற்றப்பட்டு போக்குவரத்து சீரானது.

தமிழ்நாடு அரசு மேற்கொண்ட இந்த துரித நடவடிக்கையின் அடிப்படையில் சென்னை மாநகரம் இயல்பு நிலைக்கு திரும்பியது. இந்நிலையில் இன்று (டிசம்பர் 2) காலை சென்னை மாநகரின் முக்கிய சாலைகள் அனைத்தும் வழக்கம்போல் சீரான போக்குவரத்துடன் நடந்து வருகிறது.

பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் வழக்கம்போல் தங்கள் பணிகளுக்கு எவ்வித இடையூறும் இன்றி தங்கள் வாகனங்கள் மூலம் செல்கின்றனர். மேலும் சென்னை மாநகர பேருந்துகள், மின்சார ரயில்கள் என அனைத்தும் வழக்கம்போல் செயல்பட்டு வருகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு மேற்கொண்ட சீரிய முயற்சியினால் பலத்த மழைக்கு பிறகு எவ்வித பாதிப்புமன்றி சென்னை மாநகரம் முழுவதும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது என மக்கள் பாராட்டி வருகின்றனர்.

Also Read: மக்களால் நிராகரிக்கப்பட்டவர் பிரதமர் மோடி தானே தவிர, 'இந்தியா' கூட்டணி அல்ல : முரசொலி தலையங்கம்!