Tamilnadu
"எந்தவித வெள்ள பாதிப்புகளும் இல்லை" - முதலமைச்சர், தமிழ்நாடு அரசின் செயல்பாட்டுக்கு பொதுமக்கள் பாராட்டு !
ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை மாற்றம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்த நிலையில், சென்னை கொளத்தூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகள் மற்றும் மீட்புப் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.
முதலில் கொளத்தூர் செல்வி நகர் பகுதியில் அமைந்துள்ள மழை நீர் வெளியேற்று நிலையம் சென்று அந்த மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். இதை தொடர்ந்து சீனிவாச நகர் நகர ஆரம்ப சுகாதார நிலையம் சென்று அங்கு வரும் நோயாளிகளுக்கு எந்த வகையில் சிகிக்சை அளிக்கக்கபடுகிறது, சிகிச்சைக்கு தேவையான போதுமான வசதிகள் உள்ளனவா என்பது குறித்து அங்குள்ள மருத்துவர்கள் பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.
அதன் பிறகு GKM காலனியில் அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள குளத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டார். பின்னர் பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிக்கைபெற்று வருபவர்களிடம் அவர்களுக்கு அளிக்கபட்டுவரும் சிகிக்கைகள் குறித்து நேரடியாக அவர்களிடம் கேட்டறிந்தார்.
அதுமட்டுமின்றி செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்களை சந்தித்து அவர் பகுதிகளில் வெள்ள பாதிப்புகள் இருந்ததா என்றும் தற்போதைய நிலை எப்படி உள்ளது என்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.
பொதுமக்களும் முதலமைச்சரிடம் தங்கள் பகுதியில் இந்த மழை காலங்களில் எந்த பாதிப்பும் இல்லை எனவும் தமிழ்நாடு அரசின் முதலமைச்சரும் மேற்கொண்ட நடவடிக்கைகளின் காரணமாக கொளத்தூரில் எந்தவித வெள்ள பாதிப்புகளும் இல்லை என்று அரசுக்கும் தமிழ்நாடு முதல்வருக்கும் பாராட்டுக்களும் நன்றிகளும் தெரிவித்தனர்.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!