Tamilnadu
தொடர் கனமழை... நாளை எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - முழு விவரம் !
தமிழ்நாட்டில் தற்போது கனமழை பெய்து வருகிறது. அதிலும் கடந்த சில நாட்களாக ஃபெஞ்சல் புயல் தாக்கத்தால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தற்போது புயல் கரையை கடந்திருக்கும் நிலையில், ஒரு சில மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து ஒரு சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (02.12.2024) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு :
=> பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை :
திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
=> பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை :
இராணிப்பேட்டை, வேலூர், தருமபுரி, திருப்பத்தூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
=> ஏற்கனவே புதுச்சேரியில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாளை (02.12.2024) நடைபெறவிருந்த சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு, தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் (Regular exams) ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும், அதன் உறுப்பு கல்லூரிகளிலும் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும் வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளிலும் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வு தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“பீகாரில் 20 ஆண்டுகள் ஆனாலும் தீராது இந்த துயரம்!” : இராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி குற்றச்சாட்டு!
-
“முதலமைச்சர் கோப்பை போட்டி நடத்த காரணம் இதுதான்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
ரூ.7 கோடியுடன் ATM வாகனத்தை கடத்திச் சென்ற கும்பல் : பெங்களூருவில் நடந்த துணிகரம்!
-
17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் : பா.ஜ.க ஆட்சி நடக்கும் உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!
-
மூளையை தின்னும் அமீபா வைரஸ் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன முக்கிய தகவல்!