Tamilnadu
தேவைக்கேற்ப ஆவின் பால் தங்குதடையின்றி விநியோகம் செய்யப்படுகிறது - ஆவின் நிர்வாகம் !
வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்ததை தொடர்ந்து, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதலே கனமழை பெய்து வருகிறது. எனினும் பொதுமக்களுக்கு பால் விநியோகம் தடையின்றி கிடைக்க, ஆவின் நிறுவனம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இது குறித்து ஆவின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த இரண்டு நாட்களாக, மழையால் பால் விநியோகத்தில் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாமல் இருக்க, ஆவின் நிறுவனம் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வண்ணம், 201 க்கும் மேற்பட்ட ஒப்பந்த வாகனங்கள் மூலம் பால் விநியோகமும், 31 ஒப்பந்த வாகனங்கள் மூலம் அனைத்து பால்பொருட்களும் மக்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
மேலும், தேவைக்கேற்ப பிற மாவட்டங்களிலிருந்து தேவையான பால், பால் பவுடர் மற்றும் பால் பாக்கெட்டுகள் கொண்டு வரபட்டுள்ளது. ஆவின் நிறுவனம் தினமும் 14.50 இலட்சம் லிட்டர் பால் விற்பனை செய்துவரும் நிலையில், நேற்று கடும் மழை பெய்த போதிலும் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மக்களின் தேவைக்கேற்ப, ஆவின் நிறுவனம் தங்களது விநியோகத்தை அதிகரித்து, 16 இலட்சம் லிட்டர் பால் விற்பனை செய்ததுள்ளது, பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது .
ஆவின் நிறுவனம் எல்லாக் காலக்கட்டத்திலும் பொதுமக்கள் நலன் மற்றும் அவர்களின் விருப்பத்தை அறிந்து செயல்பட்டு வருகிறது. எனவே மக்களின் தேவைக்கேற்ப அனைத்து ஆவின் பால் வகைகளும் எவ்வித தங்குதடையுமின்றி விநியோகம் செய்யப்படுகிறது என்பதை தெரிவித்து கொள்கிறோம்"என்று கூறப்பட்டுள்ளது.
Also Read
-
“வரலாற்றிலேயே இல்லாத டம்மி முதலமைச்சர்.. ஸ்டிக்கர் ஒட்டி பொய் பரப்புகின்றனர்” : உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
“ஸ்டிக்கர் ஒட்டாமல் புதிய முதலீடுகளை ஈட்டுவாரா முதலமைச்சர்?” : டி.ஆர்.பி.ராஜா கேள்வி!
-
“முதல்வருக்கு நாக்கில் நிதானம் வேண்டும்.. சட்டமன்றத்தில் கண்ணியம் இல்லை”: திருச்சி சிவா எம்.பி கண்டன உரை!
-
முதலமைச்சர் விஜய் தொகுதியின் அவலம்.. 6 நாட்களாக தண்ணீர் இல்லை.. கோபத்துடன் வீதியில் இறங்கிய மக்கள்!
-
“MISA தியாகத்தைக் கொச்சைப்படுத்துவதா?” - விஜய்யைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வெகுண்டெழுந்த தி.மு.க!