Tamilnadu
திருநங்கை ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரூ. 1 லட்சம் மானியம் : பேரவையில் அமைச்சர் சி.வி.கணேசன் அறிவிப்பு!
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல்நாளான நேற்று மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று கேள்வி நேரத்துடன் சட்டப்பேரவை தொடங்கியது. பின்னர் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் சி.வி. கணேசன், 12 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதன் விவரம் வருமாறு:-
1.தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள 1000 பெண், திருநங்கை ஓட்டுநர்களுக்கு புதிதாக ஆட்டோ வாகனம் வாங்கும் செலவினத்தில் ரூ. 1 லட்சம் மானியமாக வழங்கப்படும்.
2.பட்டாசு தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு புத்தாக்கப்பயிற்சி ரூ.24.90 லட்சம் செலவில் வழங்கப்படும்.
3. தொழிற்சாலைகளில் பயன்பாட்டில் உள்ள நவீன தொழில்நுட்ப யுத்திகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொடர்பாக ரூ.15 லட்சம் செலவில் பயிற்சி வழங்கப்படும்.
4.தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக அலுவலர்களுக்கு ரூ.29.65 லட்சம் செலவில் மடிக்கணினிகள் வழங்கப்படும்.
5.தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் நிர்வாக அலுவலகம் மற்றும் கணினி தொடர்பான வசதிகள் மேம்படுத்தப்படும்.
6.புதியதாக வளர்ந்து வரும் தொழில் வாய்ப்புகள் மற்றும் பிற தொழில் வாய்ப்புகள் குறித்து ஊடாடல் காணொலி காட்சிப்பதிவுகள் கல்வி தொலைக்காட்சி வாயிலாக ஒளிபரப்பப்படும்.
7. 32 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள வகுப்பறைகளில் இணையதள வசதியுடன் கூடிய ஸ்மார்ட் டிவி வசதி ரூ.10.11 லட்சம் செலவில் ஏற்படுத்தி தரப்படும்.
8. அரசு தொழிற்பயிற்சி நிலைய விடுதிகளில் ரூ.92 லட்சம் செலவில் நூலகங்கள் அமைக்கப்படும்.
9. தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்று வரும் மாணவர்களுக்கு 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மூலம் நவீன தொழில் நுட்பங்களில் குறுகிய கால பயிற்சி அளிக்கப்படும்.
10.குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு, அவர்களின் தொழில் திறனை மேம்படுத்துவதற்கு 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி வசதிகள் செய்து தரப்படும்.
11. தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் வழங்கப்படும் பயிற்சி கட்டணம் விரைவாக வழங்ககுவதற்காக இணையதள வசதி வருவாக்கப்படும்.
12. தனியார் தொழிற்பயிற்சி நிலைய பயிற்சியாளர்களுக்கும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மூலம் வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
Also Read
-
”தமிழ்நாட்டை உலுக்கிய கோவை சிறுமி கொலை.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. மவுனத்தில் முதல்வர் விஜய்!”
-
”இந்தியப் பொருளாதாரத்தில் மந்தநிலை.. ஐ.நா.வின் கணிப்பு.. பொய் கூறுகிறாரா பிரதமர்?” - முரசொலி தலையங்கம்!
-
வேலியே பயிரை மேய்வதா? : விசாரணை என்ற பெயரில் இளம் பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட காவல் உதவி ஆய்வாளர்!
-
மாமூல் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த த.வெ.க நிர்வாகி : தமிழ்நாடு முழுவதும் தொடரும் அராஜகம்!
-
“ஆதவ் அர்ஜுனா அரசியலில் ஒரு கள்ள நாணயம்” : ஆர்.எஸ்.பாரதி சாடல்!