Tamilnadu
சார்ஜ் போட்டபடி Laptop பயன்படுத்திய இளம் பெண் : தந்தை கண்முன் நேர்ந்த சோகம்!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜராம். இவருக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பு செந்தி மயில் என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது ராஜராம் துபாயில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் மனைவி செந்தில் மயில் வீட்டில் சார்ஜ் போட்டபடி லேப்டாப்பை பயன்படுத்தியுள்ளார். அப்போது திடீரென அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இவரது அலறல் சத்தம் கேட்டு, அவரது தந்தை வெளியே வந்து பார்த்தபோது மகள் மயங்கி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
பின்னர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்த விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சார்ஜ் போட்டபடி Laptop பயன்படுத்திய இளம் பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
கொளத்தூர் கபாலீசுவரர் கல்லூரி : ரூ.31.45 கோடி செலவில் புதிய கட்டடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் !
-
“ED, IT, CBI-யை ஒரு கை பார்க்க நாங்களும் தயாராகதான் இருக்கிறோம்!”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”என்னுடைய உயரம் எனக்குத் தெரியும்” : கலைஞர் பாணியில் பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
மாணவி தற்கொலை வழக்கு : அம்பலமான பா.ஜ.க.வின் கலவர அரசியல் - முரசொலி!
-
பொள்ளாச்சியில் ரூ.9.83 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் திறப்பு! : முழு விவரம் உள்ளே!