Tamilnadu
”மோடிக்கு துணைபோகிறதா தேர்தல் ஆணையம்?” : சந்தேகம் எழுப்பும் டி.ராஜா!
"தேர்தல் ஆணையம் இன்றைக்கு சுதந்திரமாக செயல்படுகிறதா? என்ற கேள்வி எழுகிறது. பிரதமர் மோடியின் மத ரீதியான பேச்சை கண்டிப்பதற்கு பதில் ஜே.பி நட்டாவுக்கு கடிதம் எழுதுகிறது தேர்தல் ஆணையம். இது தேர்தல் ஆணையம் நடுநிலையோதான் செயல்படுகிறதா? என்ற சந்தேகத்தை எழுப்புகிறது." என CPI பொதுச் செயலாளர் டி.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜா, ”இன்றைக்கு தேர்தல் ஆணையம் அரசியல் சட்ட நெறிகளுக்கு உட்பட்டு செயல்படுகிற ஒரு நேர்மையான ஆணையமாக இருக்கிறதா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
பிரதமர் மோடியின் மத ரீதியான பேச்சை கண்டிப்பதற்கு பதில் ஜே.பி. நட்டாவுக்கு கடிதம் எழுதுகிறது. இதனால் தேர்தல் ஆணையம் சுதந்திராமாக செயல்படுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இருப்பினும் இந்தியா முழுவதும் பா.ஜ.கவுக்கு எதிரான மனநிலையே உள்ளது. ஜூன் 4 ஆம் தேதி வெளியாகும் முடிவுகள் பா.ஜ.கவுக்கு எதிரானதாக இருக்கும். இந்த தேர்தலில் பா.ஜ.க அரசு அகற்றப்பட்டு இந்திய கூட்டணி ஆட்சியை அமைக்கும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
எழுச்சியுடன் நடந்த திமுக முப்பெரும் விழா.. விருதுகளை வழங்கி சிறப்பித்த கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
Dummy முதலமைச்சரின் ஆட்சியில் காற்றில் பறக்கும் சட்டம் - ஒழுங்கு : எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி சாடல்!
-
சென்னை விமானநிலையம் - தனியார்மயமாக்கும் பாஜக அரசின் முயற்சிக்கு துணை போகும் தவெக: தமிழச்சி தங்கபாண்டியன்!
-
“அசிங்கப்படுவது விஜய் மட்டுமல்ல, தமிழ்நாடும்தான்” : விஜய்யின் லண்டன் பயணத்தை விமர்சித்த முரசொலி!
-
“தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை அனுமதிக்க முடியாது; தேவைப்பட்டால்...” : உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்!