Tamilnadu
போதைப் பொருட்களை பதுக்கிய அதிமுக ஜெயக்குமாரின் உறவினர் கைது : போலிஸ் அதிரடி!
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த காதர் மொய்தீன், 8 கிராம் மெத்தபெட்டமின் போதைப் பொருள் வைத்திருந்ததை அடுத்து தனிப்படை போலிஸார் அவரை கைது செய்தனர்.
பிறகு கைது செய்யப்பட்ட காதர் மொய் தீனிடம் நடத்திய விசாரணையில், சென்னை திருவல்லிக்கேணி சுல்தான் என்பவரின் வாட்ஸ் அப் குழுவில் தாம் இருப்பதாகவும், அதன் மூலமாகத்தான் போதைப் பொருள் வாங்கியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
பின்னர், சுல்தான் அலாவுதீன் என்பவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்ட போது தான் திருவான்மியூரைச் சேர்ந்த ராகுல் என்பவரிடம் மொத்தமாகப் போதைப் பொருள் வாங்கிய தெரியவந்தது.
இந்த தகவலின் அடிப்படையில் திருவான்மியூர் பகுதிக்குச் சென்ற தனிப்படை போலிஸார் வீட்டில் பதுங்கி இருந்த ராகுல் என்பவரைச் செய்தனர். கைது செய்யப்பட்ட இவரிடம் நடத்திய விசாரணையில் ராகுல் நீச்சல் குளம் பராமரிப்பு பணிகளைச் செய்து வருவதும், அதிமுக முன்னாள் அமைச்சரான ஜெயக்குமாரின் உறவினர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த போதைப் பொருட்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“பட்டியலின மக்களுக்கான நிதியை பயன்படுத்தாதது ஏன்?” : மக்களவையில் ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“மாம்பழ கூழுக்கு 12% ஜிஎஸ்டி வரி என்பது அநியாயம்!” : திமுக எம்.பி. பி.வில்சன் குற்றச்சாட்டு!
-
சென்னை கோயம்பேடு - பட்டாபிராம் இடையேயான மெட்ரோ ரயில்! : தமிழ்நாடு அரசிடம் திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு!
-
ஒன்றிய பா.ஜ.க ஆட்சியில் கடன் மதிப்பு ரூ.200 லட்சம் கோடியாக உயர்வு! : வெளியான அதிர்ச்சி தகவல்!
-
மின்கழிவுகள் மூலம் ஈட்டிய GST தொகை எவ்வளவு? : நாடாளுமன்றத்தில் திருச்சி சிவா MP கேள்வி!