Tamilnadu
”தொழிலாளர்களின் ஏணி திராவிட மாடல் அரசு” : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மே தின வாழ்த்து!
மே 1 உழைப்பாளர் தினத்தை தொழிலாளர்களும் அரசியல் கட்சி தலைவர்களும் இன்று கொண்டாடி வருகிறார்கள். சென்னையில் உள்ள மே தின நினைவு பூங்காவில் அமைந்துள்ள மே தின நினைவு சின்னத்திற்கு அமைச்சர் துரைமுருகன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதேபோல் அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கட்சி அலுவலங்களில் கொடிகளை ஏற்றி மே தினத்தை கொண்டாடி வருகிறார்கள்.
இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மே தின வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், உலகை இயக்கும் உழைப்பாளர்களைப் போற்றும் நாள்`மே தினம்’. அந்தப் பெருமைக்குரிய நாளை ஊதியத்துடன் கூடிய விடுமுறையாக அறிவித்தவர், முத்தமிழறிஞர் கலைஞர். தொழிலாளர் நலத்துறை, தொழிலாளர் நலன் அமைச்சகத்தையும் முதன்முதலில் நிறுவியவர் கலைஞர். சென்னை நேப்பியர் பூங்காவுக்கு `மே தின பூங்கா’ எனப் பெயர் சூட்டியவரும் கலைஞரே.
கடந்த 3 ஆண்டுகளில் நம்முடைய திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், 44 தொழில்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை மறுநிர்ணயம் செய்திருக்கிறார். 17 லட்சம் நலவாரிய உறுப்பினர்களுக்கு ரூ.1,305 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் துணைநிற்கும் உழைப்பாளிகள் ஏற்றம் பெற, அவர்களுக்கு ஏணியாய் என்றும் துணை நிற்போம்.” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!