Tamilnadu
"அண்ணாமலை எங்களை மதிக்கவில்லை... பாஜகவிற்கு தேர்தல் பணி செய்யமுடியாது" - பாமக அறிவிப்பு !
இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்த நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணிக்கு செல்வதாக இருந்த பாமக, இறுதிநேரத்தில் பாஜகவுடன் கூட்டணி வைப்பதாக அறிவித்தது. ஆனால், இந்த கூட்டணி குறித்து பாமக தொண்டர்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது. மேலும், பல்வேறு இடங்களில் பாஜக - பாமக தொண்டர்களுக்கு இடையே தகராறும் ஏற்பட்டது.
இந்த நிலையில், பாஜக தங்களை கொஞ்சம் கூட மதிக்கவில்லை என்று அக்கட்சிக்காக தேர்தல் பணியை செய்யப்போவதில்லை என்று கோவை பாமக அறிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் மாவட்ட செயலாளர் கோவை ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை தொகுதி பாஜக வேட்பாளர் பாமக அலுவலகத்துக்கு இதுவரை வரவில்லை. அதேபோல வேட்பாளர் அறிமுக கூட்டத்திற்கு பாமகவை அழைக்கவில்லை.
கோவை தொகுதி வேட்பாளரின் வேட்பு மனு தாக்கலுக்கு பாமகவை அழைக்கவில்லை. ஆறு தொகுதியில் இரண்டு தொகுதிக்கு மட்டுமே அழைப்பு கொடுக்கப்பட்டது. தேர்தல் அலுவலகம் திறப்பு விழாவிற்கும் பாமகவை அழைக்கவில்லை. எந்த ஒரு பிரச்சாரத்திற்கும் இதுவரை அழைப்பு வரவில்லை. கோவை பாஜக தேர்தல் பொறுப்பாளர் கூட்டணி தலைவர்கள் யாரையும் மதிப்பதில்லை.
ஏறக்குறைய அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களுமே மிகுந்த மனவருத்தத்தில் தான் உள்ளனர். கூட்டணி தர்மம் முக்கியம் தான், அதைவிட சுயமரியாதை முக்கியம். கூட்டணி தர்மத்திற்கு கட்டுப்பட்டு தேர்தல் பணிகளில் இருந்து மௌனமாய் வெளியேறுகிறோம்"என்று கூறியுள்ளார்.
Also Read
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!