Tamilnadu
”தூக்கத்தில் கனவு காணுகிறார் அண்ணாமலை” : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா பதிலடி!
கோவை மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து கரும்புக்கடை பகுதியில் ரமலான் தொழுகை முடிந்து வந்த இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரிப்பில் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா ஈடுபட்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, " இது மிகவும் முக்கியமான காலகட்டம். இந்தியாவின் தலையெழுத்தை மாற்றி எழுதக் கூடிய ஒரு காலகட்டம். பாசிச வாதிகளிடமிருந்து பிரிவினை வாதிகளிடமிருந்தும், இந்தியாவை மீட்க வேண்டும். மாநில உரிமைகளை மீட்க வேண்டிய முக்கியமான காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்.
இஸ்லாமிய சகோதரர்களுக்கு உறுதுணையாக இருக்கும் ஒரே தலைவர் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்தான். களத்தில் வரவேற்பு உற்சாகமாக இருக்கிறது. இளைஞர்கள், தன்னார்வலர்கள் தாமாக வந்து உதய சூரியனுக்கு வாக்கு கேட்பது, ஒட்டு மொத்த மக்களின் எண்ண ஓட்டமும் எந்த பக்கம் இருக்கிறது என்பதை காட்டுகிறது.
கோவையில் போட்டியிடும் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என கூறுகிறார். தூங்கிக் கொண்டிருப்பவர்களை என்ன செய்வது. அவர் கனவு காணட்டும்.
பாஜக கட்சி சமுதாயத்திற்கு எதிரானது. சமூக விரோதிகளின் கூடாரமாக பா.ஜ.க உள்ளது. ஒட்டுமொத்த விரோதிகள் அந்த இயக்கத்தில் தான் இருக்கிறார்கள். வாஜ்பாய் போன்ற அற்புதமான தலைவர்கள் இந்த இயக்கத்திலிருந்தார்கள். ஆனால் இப்போது காவல் நிலையத்தில் இருக்கும் குற்றவாளிகள் பதிவேட்டில் இருப்பவர்கள்தான் பா.ஜ.கவில் இருக்கிறார்கள். இதை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளிப்படையாக ஒத்துக்கொண்டுள்ளார். அதிமுக மற்றும் பா.ஜ.கவில் உள்ள சகோதரிகளும் உதய சூரியனுக்கு நிச்சயம் வாக்களிப்பார்கள்"என தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!