Tamilnadu
40/40 : நாடாளுமன்ற தேர்தல் 2024 -திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு என்னென்ன தொகுதிகள்? -முழு விவரம்
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் அரசியல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி கடந்த 10 ஆண்டுகால பாசிச பாஜக அரசை வீழ்த்த, நாடு முழுவதுமுள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கியுள்ளது.
இந்த கூட்டணி இந்தியா முழுவதும் தேர்தல் களத்தில் இறங்கவுள்ள நிலையில், இதற்கான ஆயத்தப்பணிகள் நடைபெற்று வருகிறது. அண்மையில் டெல்லி, ஹரியானா, குஜராத், கோவா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இந்தியா கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவடைந்து உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழ்நாட்டிலும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவடைந்தது.
அதன்படி,
1. தி.மு.க. (DMK) - 21
2. காங்கிரஸ் (Congress) - 10 (தமிழ்நாடு - 9, புதுச்சேரி - 1)
3. ம.தி.மு.க. (MDMK) - 1
4. சி.பி.ஐ.(எம்) (CPIM) - 2
5. சி.பி.ஐ. (CPI) - 2
6. வி.சி.க. (VCK) - 2
7. இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் (IUML) - 1
8. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (KMDK) - 1 - என 40 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சூழலில் தற்போது 40 தொகுதிகளிலும் எந்தெந்த கட்சிகள் களமிறங்குகின்றனர் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதில்,
=> காங்கிரஸ் :
1. திருவள்ளூர்
2. கடலூர்
3. மயிலாடுதுறை
4. சிவகங்கை
5. திருநெல்வேலி
6. கிருஷ்ணகிரி
7. கரூர்
8. விருதுநகர்
9. கன்னியாகுமரி
10. புதுச்சேரி
=> ம.தி.மு.க. (MDMK)
திருச்சி
=> சி.பி.ஐ.(எம்) (CPIM)
மதுரை,
திண்டுக்கல்
=> சி.பி.ஐ. (CPI)
நாகப்பட்டினம்,
திருப்பூர்
=> வி.சி.க. (VCK)
விழுப்புரம்,
சிதம்பரம்
=> இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் (IUML)
இராமநாதபுரம்
=> கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (KMDK)
நாமக்கல்
Also Read
-
நிதி நிறுவன மோசடி... பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு !
-
அகமதாபாத் விமான விபத்து : விபத்துக்கு விமானிகள் காரணம் என்பதை ஏற்கமுடியாது... விமானிகள் சங்கம் காட்டம் !
-
சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 36.08 லட்சம் உதவித்தொகை... வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“அதிமுக - பாஜக சதித்திட்டத்தை உணர்ந்து ‘ஓரணியில்’ திரளும் மக்கள்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
ஆங்கில வழிக் கல்விக்கு எதிரான தேசிய கல்விக் கொள்கை! : ‘தி இந்து’ தலையங்கம் விமர்சனம்!