Tamilnadu
போதை பொருட்களின் புகலிடம் குஜராத் : அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றச்சாட்டு!
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சாலை பணிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கிவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ், "போதைப்பொருள் வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டால் அவர் மீது நடவடிக்கை எடுக்க அதற்கான அமைப்புகள் இருக்கிறது. இவ்விவகாரத்தில் தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது.
ஆனால் போதைப் பொருட்களின் புகலிடமாக குஜராத்தும் அதானி துறைமுகமும் தான் இருக்கிறது. இந்த உண்மையை பா.ஜ.க மறைப்பதுதான் வேடிக்கையாகவும் விந்தையாகவும் உள்ளது. பா.ஜ.கவின் பத்து வருட ஆட்சி வெறும் ட்ரெயிலர் தான் என்பதை மோடியே ஒத்துக்கொண்டுள்ளார். இதை நாங்கள் முன்பே கூறி இருந்தோம். ஒரு காலி பெருங்காய டப்பா. ட்ரெயிலரை நம்பி ஏமாற வேண்டாம் என்று நாங்கள் முன்பே கூறி இருக்கிறோம். அதனைப் பிரதமரே தற்போது ஒத்துக்கொண்டது வரவேற்கத்தக்கது.
குஷ்புக்கு ஏழைகளின் பட்டினி பசியைப் பற்றித் தெரியுமா?. ஒரு நாளாவது அவர்கள் ஒரு குடிசை வீட்டில் தங்கி இருப்பார்களா?. அவர்களின் வலியை இவர் உணர்ந்திருப்பாரா?. அவர் பேசியது ஆணவத்தின் உச்சம்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!