Tamilnadu
பெரியார் பல்கலை.யில் ஆளுநருக்கு எதிர்ப்பு: மாணவர் இயக்கங்கள் போராட்டம்.. சேலத்தில் பரபரப்பு !
பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல் மற்றும் பேராசிரியர்கள் தொடங்கிய தனியார் நிறுவனமான பூட்டர் பவுண்டேஷன் மற்றும் பூட்டர் பார்க் (PUTER Park) நிறுவனங்கள் மூலம் பயிற்சி கல்வி பாடத்திட்டம் வழங்குவது தொடர்பாக பல தனியார் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து, அதன் மூலம் மோசடி மற்றும் முறைகேட்டில் ஈடுபடுவதாக எழுந்த புகார் எழுந்தது.
அதன்பேரில், பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன் கடந்த டிசம்பர் 26ந் தேதி கருப்பூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தால் நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் தலைமறைவான பதிவாளர் மற்றும் துணை பேராசிரியர் சதீஷ் ஆகியோரை காவல்துறையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
இதனிடையே பூட்டர் பவுண்டேஷன் செயல்பாடு மற்றும் அதில் நடைபெறும் பணப்பரிமாற்றம் தொடர்பாக துணைவேந்தர் மற்றும் பதிவாளருக்கு ஆதரவாளர்களான பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஜெயராமன், சுப்பிரமணிய பாரதி, துணை பேராசிரியர்கள் நரேஷ் குமார், ஜெயக்குமார் உள்ளிட்ட ஐந்து பேரை காவல் நிலையம் வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், பெரியார் பல்கலைக்கழகத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் இன்று வருகிறார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பினர் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குற்றச்சாட்டுக்கு உள்ளான துணைவேந்தரை தமிழ்நாடு ஆளுநர் சந்திக்கக் கூடாது என்றும் இந்த முறைகேடு தொடர்பான சர்ச்சை முடியும் வரை பெரியார் பல்கலைக்கழகத்திற்கு வரக்கூடாது என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர் அமைப்பினர் போராடினர்.
மேலும், தமிழ்நாடு ஆளுநர் திடீரென்று பல்கலைக்கழகத்திற்கு வருவது சந்தேகமாக உள்ளது என்றும் இது தொடர்பான எந்த ஒரு அறிவிப்பும் பேராசிரியர்களுக்கோ, ஆட்சி மன்ற குழு உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்காத நிலையில் ரகசியமாக ஆலோசனை கூட்டம் என்ற பெயரில் வருவது மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்றும் மாணவர் அமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மாணவர் அணியினர், இந்திய மாணவர் சங்கம், திராவிடர் கழக மாணவர் அமைப்பினர், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், விடுதலை சிறுத்தைகளின் மாணவர் அமைப்பு, காங்கிரஸ் மாணவர் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் ஒன்றிணைந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
Also Read
-
இந்திய உரிமையை நிலைநாட்ட பேச்சுவார்த்தை தொடங்குமா ஒன்றிய பா.ஜ.க. அரசு? : முரசொலி தலையங்கம் கேள்வி!
-
“ஏழை மாணவர்களின் விடுதிகள், இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்!” : முதலமைச்சர் அறிவிப்பு!
-
பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தவர் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் !
-
"பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது" - அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா பேட்டியால் சலசலப்பு !
-
அங்கன்வாடி மையங்கள் மூடலா? மீண்டும் போலி செய்தி வெளியிட்ட தினமலர்.. உண்மை என்ன? - விவரம் உள்ளே!