Tamilnadu
”தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் ஆளுநர் ரவி”: அமைச்சர் சேகர்பாபு குற்றச்சாட்டு!
ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை கொண்டு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி முட்டுக்கட்டையாக இருந்து வருகிறார் என அமைச்சர் சேகர்பாபு குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, "தி.மு.க ஆட்சியில் 6 ராஜ கோபுரங்கள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. 6 இராஜ கோபுரங்கள் கட்டப்பட்டு வருகிறது. 13 திருத்தேர்கள் மராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. பல ஆண்டுகளாக ஓடாமல் இருந்த திருத்தேர்கள் புதுப்பிக்கப்பட்டு தற்போது வீதி உலா வந்து கொண்டு இருக்கிறது.
குறுங்காலீஸ்வரர் கோயிலுக்கு ரூ.85 லட்சம் செலவில் 5 இராஜகோபுரங்கள் கட்டவும், ரூ.53 லட்சத்தில் புதிய மரத்தேர், அன்னதான கட்டம் ரூ. 49 லட்சம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது. தி.மு.க ஆட்சியில் இதுவரை 1093 கோயிலுக்குக் குடமுழுக்கு நடைபெற்ற உள்ளது. 5472 கோடி ரூபாய் மதிப்புள்ள 5820 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டு உள்ளது.
1953 ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்து அறநிலையத்துறை இதுவரை அமைந்த ஆட்சியில் இல்லாத வகையில் தற்போதைய திமுக ஆட்சியில் திருப்பணிகள், ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.600 கோடி உபதார்களிடம் இருந்து பெறப்பட்டு உள்ளது. தி.மு.க ஆட்சி ஆன்மீக ஆட்சியாகத் திகழ்ந்து வருகிறது.
ஆளுநர் தமிழ்நாட்டின் வளர்ச்சியில் முட்டுக்கட்டை போடுகிறார். அதை முறியடித்து தமிழக அரசு செயல்படுகிறது. ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தைக் கொண்டு அரசுக்குத் தொந்தரவு செய்து வருகிறார் ஆளுநர். மேலும் மனிதனைப் பிரித்தாள்வது, சாதி மத துவேங்களைகள் கொண்ட பணியாக ஆளுநர் செயல்படுகிறார்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
தெருநாய் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன... முழு விவரம் உள்ளே !
-
”ஓராண்டில் 15,500 பேர் மலையேற்றம்” : சுற்றுலாத்துறையில் முன்மாதிரியாக திகழும் தமிழ்நாடு!
-
கல்லறைத் தோட்டங்கள் - கபர்ஸ்தான்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய ஆணை என்ன?
-
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் - நகர் ஊரமைப்பு இயக்ககம்: பணி நியமன ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
-
”நெல் போக்குவரத்து ஒப்பந்த விதிகளின்படி முறையாகச் செய்யப்பட்டுள்ளது” : சக்கரபாணி அறிக்கை!