Tamilnadu
வெளியூரில் இருந்து வேலை தேடி வந்த இளைஞர்.. அதிகாலை சாலையை கடக்க முயன்றபோது சோகம்.. பதைபதைக்கும் CCTV !
தர்மபுரி மாவட்டம் பகுதியை சேர்ந்தவர் ரிஷி கௌதம் (30). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னைக்கு வேலை தேடி வந்துள்ளார். இதனால் இவர் தனது நண்பர்கள் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த சூழலில் கடந்த 3 நாட்கள் விடுமுறை காரணமாக ரிஷியின் நண்பர்கள் அனைவரும் அவரவர் ஊருக்கு செல்லவே, ரிஷியும் தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.
அங்கே தனது விடுமுறையை கழித்து விட்டு 5 நாட்கள் கழித்து இன்று அதிகாலை சென்னை வந்துள்ளார். குறிப்பாக தரமணியில் உள்ள ஐடி கம்பெனியில் தொழில்நுட்ப பொறியாளர் பதவிக்கு விண்ணப்பித்திருந்த ரிஷி கௌதம், இன்று நேர்முகத் தேர்வு என்பதினால் சொந்த ஊரிலிருந்து புறப்பட்டு இன்று அதிகாலை வந்துள்ளார்.
அப்போது சென்னை ஜாஃபர்கான்பேட்டை காசி திரையரங்கம் அருகே பேருந்தில் இருந்து இறங்கி சிக்னலை கடக்க முயன்றார் ரிஷி. அந்த சமயத்தில் இவர் கடக்கவே, அப்போது அதிவேகத்தில் வந்த இருசக்கர வாகனம் ரிஷி கௌதம் மீது மோதியது. இந்த விபத்தில் இளைஞர் ரிஷி தூக்கி வீசப்பட்டார். அந்த சமயத்தில் கும்பகோணத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த பேருந்து, ரிஷி மீது ஏறி இறங்கியுள்ளது.
இந்த கோர விபத்தில் இளைஞர் ரிஷி, சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து வந்த போலீசார் உயிரிழந்த இளைஞர் ரிஷியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அப்போது அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, இளைஞர் சாலையை கடக்கும்போது பைக் தூக்கி வீசப்பட்டதில், பேருந்தின் சக்கரத்திற்குள் மாட்டியது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் தற்பொழுது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலை நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு !
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்... மீண்டும் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் பலி !
-
“தீபஒளியையொட்டி பேருந்துகள் மூலம் 7,88,240 பயணிகள் பயணம்!” : அமைச்சர் சிவசங்கர் தகவல்!
-
“வக்கற்ற ஆட்சி நடத்தியவர் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கை விடுவதா?”: பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டம் - முதலமைச்சரின் மகத்தான அறிவிப்பு! : முரசொலி தலையங்கம் புகழாரம்!