வைரல்

தலையில் சிலிண்டர் வைத்து கரகாட்டம் ஆடிய பெண்.. எச்சரிக்கும் இணையவாசிகள்.. வைரலாகும் வீடியோ !

தலையில் கேஸ் சிலிண்டர் வைத்து கரகாட்டம் ஆடும் பெண் ஒருவரது வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தலையில் சிலிண்டர் வைத்து கரகாட்டம் ஆடிய பெண்.. எச்சரிக்கும் இணையவாசிகள்.. வைரலாகும் வீடியோ !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தற்போதுள்ள காலத்தில் பலரும் இணையத்தை பயன்படுத்துவது வழக்கமாகி வருகிறது. இதன் மூலம் பலர் தங்கள் திறமைகளை உலகுக்கு காட்டி வருகின்றனர். குறிப்பாக கேமரா உள்ள ஆன்ராயிடு மொபைல் பயன்படுத்துவதில் பலரும் இதனை செய்து வருகின்றனர். டிக் டாக், ரீல்ஸ் உள்ளிட்டவை மூலம் ஆடல், பாடல் கவிதை என தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தலையில் சிலிண்டர் வைத்து கரகாட்டம் ஆடிய பெண்.. எச்சரிக்கும் இணையவாசிகள்.. வைரலாகும் வீடியோ !

அவ்வாறு இவர்கள் செய்யும் இந்த செயல்கள் வைரலாகி பலரது கவனத்தையும் பெற்று வருகிறது. இவர்களுக்கு சிலர் ரசிகர்களாகவே ஆகின்றனர். ஆண்கள், பெண்கள் என பலரும் இதனை வெளிப்படுத்தி பிரபலமாகின்றனர். இந்த சூழலில் தற்போது கரகாட்ட கலைஞர் ஒருவர், சிலிண்டரை தலையில் வைத்து ஆடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

'கரகம் துர்கா' என்ற பெயர் கொண்ட கரகாட்ட கலைஞர் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். கடந்த வாரம் அவர் வெளியிட்ட இந்த வீடியோவில், தலையில் கேஸ் சிலிண்டரை வைத்து ஆடுகிறார். பின்னர் அதனை தலையில் வைத்துக்கொண்டே கீழே ஒரு பாத்திரத்தில் ஏறி நிற்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பலர் மத்தியிலும் கருத்துகளை பெற்று வருகிறது.

இந்த வீடியோவுக்காக இந்த கலைஞரை பாராட்டினாலும், பலரும் எச்சரித்து வருகின்றனர். அதாவது இது போல் செயல்களில் ஈடுபடும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், இதுபோல் இனி செய்ய வேண்டாம் என்றும் பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

தலையில் சிலிண்டர் வைத்து கரகாட்டம் ஆடிய பெண்.. எச்சரிக்கும் இணையவாசிகள்.. வைரலாகும் வீடியோ !

இதுபோல் பலரும் பலவிதமான சாகசங்களை செய்து வீடியோவாக வெளியிட்டு வருகின்றனர். அதிலும் உயரத்தில் இருந்து கொண்டு செல்ஃபி எடுப்பது, பைக்கில் ஸ்டண்ட் செய்வது உள்ளிட்ட பல விசயங்களை செய்து வருகின்றனர்.

அண்மையில் கூட அதிவேகமாக கார் ஓட்டிக்கொண்டே லைவ் வீடியோ வெளியிட்ட இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories