Tamilnadu
"நீதிமன்ற தீர்ப்பால் கர்நாடக அரசு தண்ணீரைத் திறந்து விட்டே தீரவேண்டும்".. அமைச்சர் துரைமுருகன் பேட்டி!
சென்னை கோட்டூர்புரத்தில் காவிரி விவகாரம் தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "5,000 கன அடி வீதம் 15 நாட்களுக்குக் காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த தண்ணீர் திறப்பால் குறுவை சாகுபடிக்குத் தேவையான தண்ணீர் கிடைக்கும்."
மேலும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கர்நாடக அரசு அமல்படுத்தியே தீர வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாவிட்டால் உச்சநீதிமன்றத்தை அவமதிப்புக்குக் கர்நாடக அரசு ஆளாகும். எனவே கர்நாடக அரசு அந்த நிலைக்கு செல்லாது என நினைக்கிறோம். கர்நாடக அரசு நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தும்.
நாங்கள் ஒட்டுமொத்த தண்ணீரை கேட்கவில்லை. தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரைதான் கேட்கிறோம். காவிரி நீர் கர்நாடக மாநிலத்திற்கு மட்டுமல்ல, ஆற்றின் கடைமடை வரை செல்லும் தமிழ்நாட்டிற்கும் உரிமை உள்ளது. காவிரி விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கு சென்றால் பயனில்லை என்பதால்தான் உச்சநீதிமன்றத்திக்கு சென்றோம். தற்போது தமிழ்நாட்டிற்கான தண்ணீரை போராடி பெற்று வருகிறோம்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!