தமிழ்நாடு

”அண்ணா பெயரை சொல்லவே அண்ணாமலைக்கு தகுதி இல்லை”.. ஆர்.எஸ்.பாரதி ஆவேசம்!

திராவிடம் என்ற சொல்லை கேட்டாலே சிலருக்கு எரிச்சல் ஏற்படுகிறது என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

”அண்ணா பெயரை சொல்லவே அண்ணாமலைக்கு தகுதி இல்லை”.. ஆர்.எஸ்.பாரதி ஆவேசம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தி.மு.க கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை சார்பில் சென்னை மண்டலம் மற்றும் புதுவை மாநில நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

அப்போது பேசிய ஆர்.எஸ்.பாரதி, " திராவிடம் என்ற சொல்லைக் கேட்டாலே சிலருக்கு எரிச்சல் ஏற்படுகிறது. பேரறிஞர் அண்ணா குறித்து பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவதூறாக பேசியுள்ளார். இந்த தைரியம் அவருக்கு எப்படி வந்தது?. அண்ணா குறித்து அண்ணாமலைக்கு என்ன தெரியும்?. அவரது பெயரைச் சொல்லவே அண்ணாமலைக்குத் தகுதி இல்லை.

நாம் இன்று சமமாக இருக்கிறோம் என்றால் அதற்குக் காரணமே அண்ணாதான். கடைநிலையில் இருப்பவர்கள் கூட இன்று சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என்றால் இதற்குக் பேரறிஞர் அண்ணாதான் காரணம் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. அனைத்து பத்திரிகைகளையும் ஒன்றிய அரசு முடக்கி வைத்துள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதைப் போன்று ஒரே ஊடகம் மோடி ஊடகம் என்ற நிலையை ஏற்படுத்தி வருகிறது வருகிறது பா.ஜ.க” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories