இந்தியா

”மதம், சாதியின் அடிப்படையில் மக்களைத் தவறாக வழிநடத்தும் கும்பல்” : பிரியங்கா காந்தி காட்டம்!

மதம் மற்றும் சாதியை வைத்து மக்களைத் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள் என பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

”மதம், சாதியின் அடிப்படையில் மக்களைத் தவறாக வழிநடத்தும் கும்பல்” : பிரியங்கா காந்தி காட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சத்தீஸ்கர் மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளக் காங்கிரஸ் கட்சி இப்போதிலிருந்தே தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகிறது. ஆட்சியை எப்படியாவது பிடித்தே தீரவேண்டும் என்ற முனைப்பில் பா.ஜ.க பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலம், துர்க் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிரியங்கா காந்தி, விலைவாசி உயர்வு குறித்து பிரதமர் மோடி வாய் திறப்பதே இல்லை என குற்றம் சாட்டினார்.

இந்த பொதுக் கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி, "நாட்டில் விலைவாசி உயர்வு விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. ஆனால் ஒன்றிய அரசு ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களைப் பற்றிக் கவலைப்படுவது இல்லை.

”மதம், சாதியின் அடிப்படையில் மக்களைத் தவறாக வழிநடத்தும் கும்பல்” : பிரியங்கா காந்தி காட்டம்!

ஆனால் பிரதமர் மோடி தனது நண்பர்களுக்கு பொதுத்துறை நிறுவனங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்களை விற்று வருகிறது. மேலும் புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்காக ரூ.20 ஆயிரம் கோடி செலவு செய்துள்ளது.

மேலும் பிரதமர் மோடி தனது வெளிநாட்டுப் பயணத்திற்கு மட்டும் ரூ.16ஆயிரம் கோடி செலவு செய்துள்ளார். விவசாயிகளின் வருமானம் நாளொன்றுக்கு ரூ.27 ஆக உள்ளது. ஆனால் மோடியின் நண்பர்களின் வருமானம் ரூ.1600 கோடியாக உள்ளது. இதனால் தான் பிரதமர் மோடி விலை வாசி உயர்வு குறித்து வாய் திறப்பதே இல்லை" என தெரிவித்துள்ளார்.

அதோடு, நாட்டில் மதம் மற்றும் ஜாதி அடிப்படையில் மக்களைத் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். இப்படி தவறாக வழிநடத்துபவர்களிடம் ஒன்றிய அரசாங்கம் தங்களுக்கு என்ன செய்து என்று கேள்வி எழுப்ப வேண்டும் எனவும் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories