Tamilnadu
டெலிவரி பாய் வேடத்தில் கஞ்சா கடத்தல்.. மடக்கி பிடித்த போலிசார்.. பிரபல ரெளடி பீடி பாலா கைது !
மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக போலீசாருக்கு தகவல்கள் கிடைத்தது. அதன்பேரில் அதிகாரிகள் தல்லாகுளம் காவல்துறையினர் கோரிப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோரிப்பாளையம் அருகே ஜம்புராபுரம் மார்க்கெட் பகுதியில் 2 நபர்கள் பைக்கில் வந்து கொண்டிருந்தனர்.
அவர்களை நிறுத்தி வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அவர்களிடம் கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டது. தொடர்ந்து அவர்களை கைது செய்த அதிகாரிகள் அவர்களிடம் இருந்த கஞ்சா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அதில் ஒருவர் சொமேட்டோ உடை அணிந்திருந்தார்.
இதையடுத்து அவர்களை விசாரிக்கையில், அந்த நபர் மதுரை ரேஸ் கோர்ஸ் காலனியை சேர்ந்த முன்னாள் சொமேட்டோ ஊழியரும், ரெளடியுமான சேர்ந்த பீடி பாலா என்றும், மற்றொருவர் எல்லிஸ் நகர் பகுதியைச் சேர்ந்த கணேசன் என்றும் தெரியவந்தது.
மேலும் அவர்கள் இருவரும் சேர்ந்து சமூக வலைதளம் மூலம் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அதோடு கல்லூரி மாணவர்களுக்கு இந்த பாக்கெட்டுகளை விற்று வந்ததும் கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த அதிகாரிகள் சிறையில் அடைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
“74,168 விவசாயிகளுக்கு குறைந்தபட்ச மானிய விலை (MSP) நிதி வழங்காதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
“அரசியலமைப்புப்படி வழங்க வேண்டிய 27% இடஒதுக்கீடு எங்கே போனது? இதுதான் சமூக நீதியா?” : பி.வில்சன் எம்.பி!
-
தமிழ்நாடு விளையாட்டு மாநாடு 2.0 - 2025 தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
“பா.ஜ.க.வின் பழிவாங்கும் நோக்கம் அம்பலமாகியுள்ளது!”: ‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கு குறித்து முதலமைச்சர் பதிவு!
-
தி.மு.கழக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு! : எங்கு? எப்போது?