Tamilnadu
பட்டம் எடுக்கும் போது 30 அடி உயரத்திலிருந்து விழுந்த சிறுவன்.. சோகத்திலும் பெற்றோர்கள் செய்த உதவி!
சென்னை சூளைமேடு பாரதி தெருவை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது இரண்டாவது மகன் பிரசன்னா. இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை பிரசன்னா தனது நண்பர்களுடன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது பட்டம் ஒன்று அறுந்து காற்றில் பறந்து வந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்த பிரசன்னா, பட்டத்தைப் பிடிப்பதற்காக அதன் பின்னே ஓடியுள்ளார்.
பிறகு அந்த பட்டம் பெரியார் பாதை பகுதியில் உள்ள ஒரு வீட்டின் இரண்டாவது மாடியில் சிக்கிக் கொண்டது. அதை எடுப்பதற்காகப் பிரசன்னா மாடியின் மீது ஏறி உள்ளார். அப்போது ஒரு மாடியில் இருந்து மற்றொரு மாடிக்குத் தாவ முயன்ற போது 30 அடி உயரத்திலிருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் சிறுவனை மீட்டு அருகே இருந்த தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் உயிரிழந்த சிறுவனின் உடலைப் பெற்றோர் தானமாக வழங்கியுள்ளது. மகன் இறந்த போதும் யாருக்காவது உதவியாக மகன் இருக்கட்டும் என பெற்றோர்கள் உடல் உறுப்புகனை தானமாக வழங்கியது அப்பகுதி மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
மூலிகை அழகுசாதனப் பொருட்கள் & தோல் பராமரிப்புப் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி - விண்ணப்பிப்பது எப்படி?
-
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்.. சென்னையில் முகாம்கள் நடைபெறும் நாள், இடங்கள் என்ன?- முழு விவரம் உள்ளே!
-
கடலூர், சிதம்பரம் மக்கள் கவனத்துக்கு... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் என்ன ?
-
துணை வேந்தர் விவகாரம்... ஆளுநரின் நியமனம் செல்லாது : மீண்டும் மீண்டும் கொட்டுவைத்த உயர்நீதிமன்றம் !
-
“உங்களுடன் ஸ்டாலின்” முகாம் : 13 அரசுத்துறைகள்.. குவிந்த பொதுமக்கள்.. தீர்வுகளை வழங்கிய துணை முதலமைச்சர்!