தமிழ்நாடு

20 நாளில் ரூ.1500 கிடைக்கும்.. ரூ. 1.5 கோடி மோசடி: பிரபல YouTuber மற்றும் அவரது கணவரை கைது செய்த போலிஸ்!

ரூ. 1.5 கோடி மோசடி வழக்கில் யூட்யூப் பிளாக்கர் ஹேமலதா மற்றும் அவரது கணவர், கேமராமேன் ஆகிய மூன்று பேரை போலிஸார் கைது செய்தனர்.

20 நாளில் ரூ.1500 கிடைக்கும்.. ரூ. 1.5 கோடி மோசடி: பிரபல YouTuber மற்றும் அவரது கணவரை கைது செய்த போலிஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கோவையைச் சேர்ந்தவர் ஹேமலதா. இவர் மாடர்ன் மாமி என்ற யூட்யூப் பக்கத்தை நடத்தி வருகிறார். இதில் வீட்டு உபயோக பொருட்கள் குறித்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இவரது பக்கத்தை 1.5 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள்.

இந்நிலையில் ஹேமலதா தனது பக்கத்தை தன்னை பின் தொடர்பவர்களிடம் ரூ.1200 முதலீடு செய்தால், 20 நாட்களில் ரூ.1500ஆக தருவதாகக் கூறி விளம்பரம் செய்து உள்ளார். இதை நம்பிய பலரும் பணத்தை முதலீடு செய்துள்ளனர். கிட்டத்தட்ட 100 க்கும் மேற்பட்டவர்கள் ரூ.1.5 கோடிக்கு மேல் முதலீடு செய்து உள்ளனர்.

20 நாளில் ரூ.1500 கிடைக்கும்.. ரூ. 1.5 கோடி மோசடி: பிரபல YouTuber மற்றும் அவரது கணவரை கைது செய்த போலிஸ்!

ஆனால் ஹேமலதா சொன்னபடி 20 நாட்களுக்குப் பின் உரியப் பணம் யாருக்கும் கிடைக்கவில்லை. இதனால் கடந்த 29 ஆம் தேதி ரமா என்பவர் பொருளாதார குற்றப் பிரிவில் இது குறித்து புகார் அளித்தார்.

இந்த புகார் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து இதனையடுத்து ஹேமலதா அவரது கணவர் ரமேஷ், கேமராமேன் அருணாசலம் ஆகியோர் தலைமறைவாகி உள்ளனர்.

இந்நிலையில் விளாங்குறிச்சி அருகே தலைமறைவாக இருந்த மூன்று பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 45 சவரன், 1.75 கிலோ வெள்ளி, 7 செல்போன்கள், 10 ஆயிரம் ரூபாய் உள்ளிட்ட பொருட்களைப் பறிமுதல் செய்தனர். கைது செய்த3 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்பத்தி கோவை மத்தியச் சிறையில் அடைத்தனர்.

banner

Related Stories

Related Stories