Tamilnadu
உங்களுக்கு இந்த பிரச்சனை- அறுவை சிகிச்சை செய்யனும் : மருத்துவர் சொன்னதை கேட்டு விபரீத முடிவெடுத்த வாலிபர்
செங்கல்பட்டு மாவட்டம், கரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார். வாலிபரான இவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவருக்கு சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்துள்ளார். அப்போது அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்துபார்த்தனர். இதில் அவரது கிட்னி செயல் இழந்து விட்டது தெரியவந்தது.
இது குறித்து மருத்துவர்கள் அவரிடம் தெரிவித்துள்ளனர். மேலும் அறுவை சிகிச்சையும் செய்ய வேண்டும் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதைக்கேட்டு அருண்குமார் மனமுடைந்துள்ளார்.
பிறகு மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்த அருண்குமார் யாருடனும் பேசாமல் இருந்து வந்துள்ளார். பின்னர் திடீரென வீட்டின் அருகே இருந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனே போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
பிறகு அங்கு வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிட்னி செயல் இழந்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
நீதித்துறையை விமர்சித்த சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு! : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
-
"முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் மிக பெரிய வரலாறு இது" - அமைச்சர் துரைமுருகன் பெருமிதம் !
-
”அரசாங்கத்தின் மூலதனம் பொதுப்பணித்துறை” : அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!
-
"கேள்வி கேட்பது தேசத்துரோகமாக கருதப்பட்டால் ஜனநாயகம் இருக்காது" - பாஜக அரசுக்கு முதலமைச்சர் கண்டனம் !
-
"ஆளுநர்கள் மசோதாக்கள் மீது தங்களது தனி விருப்பத்தை பயன்படுத்துகின்றனர்" - உச்சநீதிமன்றம் அதிருப்தி !