Tamilnadu
தடுப்புச் சுவரில் மோதிய Two wheeler.. காதலன் கண் எதிரே காதலிக்கு நடந்த கொடூர சம்பவம்!
சென்னை அடுத்த ஆவடி பகுதியைச் சேர்ந்தவர் அஜித். அதேபோல் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் செல்வி. இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலை நேற்று காதலர்கள் இருவரும் செம்பரம்பாக்கத்தில் உள்ள பூங்காவிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது குன்றத்தூர் அருகே சென்றபோது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்புச் சுவரில் மோதியது.
இதில் காதலர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். தலையில் பலத்த காயம் அடைந்த காதலி செல்வி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் அஜித் பலத்துக் காயமடைந்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் செல்வி உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர். மேலும் அஜித்தை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த விபத்து சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை விபத்தில் காதலன் கண் எதிரே காதலி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரேஷன் அரிசியை கொச்சைப்படுத்தலாமா? : அமைச்சர் செங்கோட்டையனுக்கு கடும் கண்டனம் தெரிவித்த எ.வ.வேலு!
-
அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை விவகாரம் : த.வெ.க அரசுக்கு கோ.வி.செழியன் கேள்வி சரமாரி கேள்வி!
-
“ திமுக ஆட்சியில் நிதியுதவி கிடைத்த மாணவனுக்கு தவெக ஆட்சியில் கிடைக்காதது ஏன்?” : இ.பரந்தாமன் கேள்வி!
-
சிவகாசி பட்டாசு ஆலை ஆய்வுகள் : பேரவையில் தங்கம் தென்னரசு - அமைச்சர் கீர்த்தனா இடையே காரசார விவாதம்!
-
“இவ்வளவுக்குப் பிறகும் மவுனமாக ஏன் இருக்கிறது? கர்நாடக அரசைப் பார்த்து பயமா?” - விஜய்க்கு முரசொலி கேள்வி!