Tamilnadu

அதிமுக ஆட்சியில் ரூ.12 கோடி லஞ்சம்: CMDA அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை!

சென்னை சோழிங்கநல்லூர் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த காக்னிஸன்ட் நிறுவனம் கடந்த 2011ஆம் ஆணடு புதிய கட்டடம் கட்டும் பணியைத் தொடங்கியது.

ஆனால் அதற்கு சி.எம்.டி.ஏ. அனுமதியைப் பெறவில்லை. இந்நிலையில் கட்டடம் கட்டத் தொடங்கி 14 மாதங்களுக்குப் பின்னர் சி.எம்.டி.ஏ. அனுமதிக்காக விண்ணப்பித்த அந்த நிறுவனம், 12 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்து அனுமதியைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து காக்னிஸன்ட் நிறுவனத்திற்கு அமெரிக்க பங்குச்சந்தை பரிமாற்றம் மற்றும் பாதுகாப்பு அமைப்பு அபராதம் விதித்தது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு நடத்திய விசாரணையில் முறைகேடு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் லஞ்சம் கொடுத்த காக்னிஸன்ட் நிறுவனத்தின் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டில் தொடர்புடைய அரசியல்வாதிகளின் பெயர்களும் விரைவில் வழக்கில் சேர்க்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

அ.தி.மு.க ஆட்சியின் போது பல்வேறு துறைகளில் ஏற்பட்ட முறைகேடுகள் குறித்து லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடித்த வருகிறது. இந்நிலையில் காக்னிசன்ட் நிறுவனத்திடமும் லஞ்சம் வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ’பப்பு’ என்று சொன்ன ராகுல் காந்தியை பார்த்து பயந்து நடுங்கும் பா.ஜ.க : முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!