Tamilnadu
பா.ஜ.க நிர்வாகிகளை பழிவாங்க தனக்கு தானே தீ வைத்து நாடகமாடிய தொண்டர்.. விசாரணையில் அம்பலம்!
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் குமரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். இவர் நான்கு மாதங்களுக்கு முன்புதான் பா.ஜ.க கட்சியில் சேர்ந்துள்ளார். இந்நிலையில் பா.ஜ.க நகர தலைவர் உமா சங்கர் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் சதீஷ் ஆகிய இருவரும் தன்மீது தீ வைத்ததாகக் காவல் நிலையத்தில் விஸ்வநாதன் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் விஸ்வநாதன் பா.ஜ.க நிர்வாகிகளைப் பழிவாங்கவே பொய்யாகப் புகார் அளித்தது தெரியவந்துள்ளது.
மேலும் தனது சட்டையில் தானே தீ வைத்துக் கொண்டு, பா.ஜ.க நிர்வாகிகள் தான் தீ வைத்தாக நாடகமாடியது அம்பலமானது. இதையடுத்து போலிஸார் விஸ்வநாதனைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பா.ஜ.க பிரமுகர்களும், நிர்வாகிகளும் இப்படிச் செய்வது முதல்முறை அல்ல. ஏற்கனவே விளம்பரத்திற்காகத் தனது வாகனங்களுக்கு தானே தீவைத்து நாடகமாடிய வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பா.ஜ.கவினர் தொடர்ந்து நடந்து கொண்டு வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
Also Read
-
“முதல்முறையாக கூட்டுறவுக்காகவே ‘கூட்டுறவு கீதம்!’ இயற்றப்பட்டுள்ளது!” : அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்!
-
ரோடு ஷோ - தமிழ்நாடு அரசின் வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் என்ன?
-
பீகார் தேர்தல் - குளறுபடிகளுக்கு இடையே நிறைவடைந்த முதற்கட்ட வாக்குப்பதிவு! : 2ஆம் கட்டத் தேர்தல் எப்போது?
-
”NDA கூட்டணி அரசை பீகார் மக்கள் தூக்கி எறிவார்கள்” : பரப்புரையில் பிரியங்கா காந்தி MP பேச்சு!
-
தமிழ்நாடு முழுவதும் நவ.11 அன்று SIR-க்கு எதிராக ஆர்ப்பாட்டம்! : மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி அறிவிப்பு!