Tamilnadu
பேசும் போது போனை கட் செய்த காதல் கணவர்.. விரக்தியில் ஓடும் ரயில் முன் பாய்ந்த மனைவி!
திருப்பத்தூர் மாவட்டம் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சதாசிவம். இவர் பல்லப்பள்ளி பகுதியைச் சேர்ந்த அனிதா என்பதை பத்து வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் அரசுப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், நேற்று வெளியே சென்ற கணவன் இரவு நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் அவருக்கு அனிதா போன் செய்துள்ளார். அப்போது தம்பதிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து பேசிக் கொண்டு இருக்கும் போது கணவர் சதாசிவம் செல்போனை கட் செய்துள்ளார். இதனால் விரக்தியடைந்த அனிதா தனது குடியிருப்பு அருகே சென்று கொண்டிருந்த ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேசும்போது செல்போனை காதல் கணவன் கட் செய்ததால் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”
Also Read
-
“பெண்கள் உயர்ந்து நடைபோட உரிமைத் தொகையும் உயரும்; உரிமையும் உயரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” மாபெரும் வெற்றிக் கொண்டாட்டம்
-
ஒன்றிய அமைச்சர்கள் இல்லாத நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டம்! : எதிர்ப்புக்கு பணிந்த ஒன்றிய அரசு!
-
திருப்பரங்குன்றம் - அதிகாரக் குரலில் நீதிமன்றங்களுக்கு உத்தரவிடும் மோகன் பகவத் : மு.வீரபாண்டியன் கண்டனம்!
-
“2026 வெற்றிக்கு அடித்தளமாக ‘இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு’ அமையும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அழைப்பு!