இந்தியா

வாடகைக்கு வீடு எடுத்து போதைப்பொருள் விற்பனை.. சின்னத்திரை நடிகையை கைது செய்த கேரளா போலிஸ்!

கேரளாவில் வாடகைக்கு வீடு எடுத்து போதைப்பொருள் விற்பனை செய்து வந்த பிரபல சின்னத்திரை நடிகையை போலிஸார் கைது செய்துள்ளனர்.

வாடகைக்கு வீடு எடுத்து போதைப்பொருள் விற்பனை.. சின்னத்திரை நடிகையை கைது செய்த கேரளா போலிஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கேரள மாநிலம் கொச்சி அடுத்த உனிச்சிரா தோப்பு சந்திப்பில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வழக்கமான சோதனையில் போலிஸார் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலிஸாரை கண்டு ஒருவர் சுவர் ஏறிக் குதித்துத் தப்பிச் சென்றார். இதனால் சந்தேகம் அடைந்த போலிஸார் அவர் குறித்து விசாரணை செய்தனர்.

வாடகைக்கு வீடு எடுத்து போதைப்பொருள் விற்பனை.. சின்னத்திரை நடிகையை கைது செய்த கேரளா போலிஸ்!

இதில் இந்த குடியிருப்பில் வசித்து வரும் அஞ்சு கிருஷணாவின் கணவர் சமீர் என தெரியவந்தது. இதையடுத்து அவரது வீட்டிற்குச் சென்று போலிஸார் சோதனை செய்தனர். அப்போது வீட்டின் சமையல் அறையில் எம்.டி.எம்.ஏ என்ற போதைப் பொருள் இருந்ததை போலிஸார் கண்டுபிடித்தனர். மேலும் இந்த தம்பதிகள் வீட்டை வாடகைக்கு எடுத்து போதைப் பொருட்களை விற்பனை செய்து வந்ததும் தெரிந்தது.

வாடகைக்கு வீடு எடுத்து போதைப்பொருள் விற்பனை.. சின்னத்திரை நடிகையை கைது செய்த கேரளா போலிஸ்!

இதையடுத்து அஞ்சு கிருஷ்ணாவை போலிஸார் கைது செய்தனர். மேலும் இவர் சின்னத்திரை நடிகையாகவும் உள்ளார். வீட்டிலிருந்த 52 கிராம் போதைப் பொருளை போலிஸார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய சமீரை போலிஸார் தேடி வருகின்றனர்.

மேலும் இவர்களுக்கு போதைப் பொருள் எப்படி கிடைத்தது, யார் யாருக்கு விற்பனை செய்துள்ளார்கள் என்பது குறித்தும் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். வாடகைக்கு வீடு எடுத்து சின்னத்திரை நடிகை போதைப் பொருட்கள் விற்பனை செய்து வந்தது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories