Tamilnadu
அடம் பிடித்த அ.தி.மு.க உறுப்பினர்கள்.. ஒரே பேச்சில் OFF செய்த சபாநாயகர்: சட்டப்பேரவையில் நடந்தது என்ன?
தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி 9ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. பின்னர் ஆளுநர் உரை மீது விவாதம் நடைபெற்றது. இதையடுத்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரைநிகழ்த்தினார். பின்னர் அந்தக் கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசின் 2023-2024ம் நிதி ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கைக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. மின்னணு வடிவிலான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
இந்த நிதி நிலை அறிக்கையில், "தகுதிவாய்ந்த குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு வரும் நிதியாண்டில் மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 15 ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்திற்காக, இந்த வரவு-செலவுத் 7,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கியதும், சபாநாயகர் அப்பாவு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வார் என அறிவித்தார். இதையடுத்து நிதியமைச்சர் நிதிநிலை அறிக்கையை வாசிக்கத்தொடங்கினார்.
உடனே அ.தி.மு.க உறுப்பினர்கள் பேச வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என கூச்சலிட்டு பேரவையில் சலசலப்பை ஏற்படுத்தினர். இருப்பினும் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தொடர்ந்து நிதிநிலை அறிக்கையை வாசித்துக் கொண்டே இருந்தார்.
அப்போது கூறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, "நிதியமைச்சர் நிதிநிலை அறிக்கையை வாசித்து முடித்தவுடன் நான் பேச வாய்ப்பு கொடுக்கிறேன். இப்ப நீங்கள் எல்லோரும் அமைதியாக உட்காருங்க. நிதிநிலை அறிக்கை வாசித்து முடித்த பிறகு அதில் நிறை, குறைகள் இருந்தா சொல்லுங்க.
நீங்கள் பேசும் எதுவும் அவைக்குறிப்பில் இடம்பெறாது. நீங்கள் முதல்வராக இருந்த நீங்க இப்படி செய்யலாமா?" என கூறினார். ஆனால் அ.தி.மு.க உறுப்பினர்கள் சபாநாயகர் பேச்சை எதுவும் கேட்காமல் அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.
நிதிநிலை அறிக்கையில் என்னென்ன அறிவிப்புகள் உள்ளது என்று கூட கேட்காமல் அ.தி.மு.க உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
தனியார்மயமாக்கப்பட்ட ஏர் இந்தியா இதுதானா? : தனது அனுபவத்தை பகிர்ந்து குற்றம்சாடிய தயாநிதி மாறன் MP!
-
வாகை சூடிய வடக்கு மண்டல சந்திப்பு; கலைஞைரின் கொள்கைப் பேரன் என்பதை செயலால் நிரூபித்து வரும் உதயநிதி!
-
“கலைஞரின் வழக்கத்தை நானும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறேன்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு பெரிய ‘Sports Star’-ஆக நிச்சயம் வருவீர்கள்!” : துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு!
-
‘தலைவர்’ இல்லாமல் இயங்கும் தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! : திருச்சி சிவா எம்.பி கண்டனம்!