Tamilnadu

“நிதிநிலை அறிக்கையில் மகளிருக்காண ரூ.1,000 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் அறிவிப்பார்” : அமைச்சர் உறுதி!

சென்னை சைதாப்பேட்டை அரங்கநாதன் சுரங்கப்பாதை, குமரன் காலனி அருகே சென்னை தெற்கு மாவட்டம் சைதை மேற்கு பகுதி 14வது வட்ட திமுக சார்பில் திராவிட முதல்வர் அவர்களின் பிறந்தநாள் விழா மற்றும் 8070 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் மாபெரும் பொதுக்கூட்டம் நிகழ்வு நடைபெற்றது.

140 ஆவது வார்டு மாம் என்ற உறுப்பினர் வழக்கறிஞர் எம்.ஸ்ரீதர் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சொற்பொழிவு நிகழ்த்தினார்.

இந்த நிகழ்வின் பொழுது பெருநகர சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார், எம்.எல்.ஏ-க்கள் தாயகம் கவி, பிரபாகரராஜா, சென்னை மண்டல குழு தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி மற்றும் துரைராஜ் உட்பட கச்சை சேர்ந்த நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் இது கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து மேடையில் உரையாற்றி அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், "ஆட்சிக்கு வருவதற்கு முன்பே முதலமைச்சர் மகளிருக்கு பேருந்துகளில் இலவச பயண திட்டத்தை கொண்டு வருவோம் என்று கூறினார். அப்போது, எல்லோரும் அந்த திட்டத்தை எப்படி கொண்டு வர முடியும் என்று கேட்டார்கள் தற்பொழுது திட்டம் சிறப்பாக அனைவரையும் வியக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது.

மேலும், ஆட்சி அமைந்து கடந்த 21 மாதத்தில் 3200 கோடி செலவு மகளிருக்கு இலவச பேருந்து திட்டத்திற்கு செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் 2.5 கோடி பயணங்கள் நடைபெற்று இருக்கிறது. இதற்கான ஒரு நிகழ்ச்சியை கூட 2 நாட்களில் நடைபெற உள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் கொண்டுவரும் திட்டத்தை மற்ற மாநிலங்கள் வியந்து பார்க்கும் அளவிற்கு இருக்கிறது. அதே போல இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் அந்த திட்டங்களை கொண்டு சேர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது. மேலும், தமிழ்நாட்டில் மட்டும் தான் 11 பெண்கள் மேயராக இருக்கிறார்கள்.

கலைஞர் ஆட்சியில் தான் பெண்களும் காவலர்கள் ஆகலாம் என்று அறிவித்தார். இந்த நிலையில் தற்போது 35 ஆயிரம் பெண் காவலர்களாக இருக்கிறார்கள் . சிறப்பு விருந்தினர்கள் செல்லும் பாதையில் பெண் காவலர்கள் நிறுத்தக்கூடாது உள்ளிட்ட என 9 திட்டங்களை முதலமைச்சர் நேற்று அறிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாது அரசு பணிகளில் 50 சதவீதம் பெண்கள் வரவேண்டும் என்பது பெரியாரின் கனவு, முதலமைச்சர் தற்பொழுது 40 சதவீதம் பேர் பெண்களுக்கு அரசு வேலை என்று அறிவித்திருக்கிறார்.

எல்லா திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற திட்டம் தற்போது வழங்கப்படவில்லை என்ற மனநிலை பெண்களுக்கு இருக்கிறது. அதையும் முதலமைச்சர் விரைவாக வழங்குவார். நாளை தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. அதில் மகளிர்காண ஆயிரம் ரூபாய் என்பது எப்போது வழங்கப்படும் என்று அதில் முதலமைச்சர் அறிவிக்க இருப்பதாக கூறினார்.

ஓமந்தூரருக்கு அடுத்தபடியாக தென் சென்னையில் 1,200 படுக்கைகள், 26 சிகிச்சை கொண்ட உயர் சிறப்பு பன்னோன்கு மருத்துவமனை சைதாப்பேட்டை தொகுதிக்கு விரைவில் வர உள்ளது. அதேபோல, முதியவர்களுக்கான சிறப்பு மருத்துவமனை சைதாப்பேட்டை தொகுதிக்கு வரவுள்ளது அது சைதாப்பேட்டை தொகுதிக்கு பெருமை என தெரிவித்தார்.

Also Read: “குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 ஊக்கத்தொகை விரைவில் வழங்கப்படும்” : நிதியமைச்சர் முக்கிய அறிவிப்பு!