Tamilnadu
கண்ணில் பெப்பர் ஸ்பிரே அடித்து ரூ.50 லட்சம் வழிப்பறி: 24 மணி நேரத்தில் குற்றவாளிகளைப் பிடித்த போலிஸ்!
செங்கல்பட்டு மாவட்டம் மேலமையூர்வல்லம் பல்லவன் தெருவைச் சேர்ந்தவர் ஜாகிர் உசைன். இவர் சென்னை மண்ணடி பகுதியில் உள்ள பணப்பரிவர்த்தனை நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இவர், திருவல்லிக்கேணியில் இருந்து மண்ணடி நோக்கி ரூ.50 லட்சம் பணத்துடன் காஜா மொய்தீன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் நேற்று சென்று கொண்டிருந்தார்.
இவர்கள் யானை கவுனி தெரு, பெருமாள் கோயில் அருகே சென்றபோது மற்றொரு வாகனத்தில் வந்த இருவர் இவர்கள் வாகனத்தின் மீது மோதி கீழே தள்ளியுள்ளனர். பிறகு ஜாகிர் உசைன் முகத்தில் பேப்பர் ஸ்பிரே அடித்து அவர் வைத்திருந்த ரூ.50 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இது குறித்து ஜாகிர் உசைன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து போலிஸார் கொள்ளை நடந்த இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
பின்னர் ஜாகிர் உசைன் உடன் இருசக்கர வாகனத்தில் வந்த காஜா மொய்தீனுடன் விசாரணை செய்தபோது அவர்தான் தனது நண்பர்களுடன் சேர்ந்து இந்த கொள்ளை சம்பவத்தை நடத்தியது தெரியவந்தது.
இதையடுத்து தலைமறைவாக இருந்த காஜா மொய்தீன் நண்பர்கள் இரண்டு பேரை போலிஸார் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காஜா மொய் தீனையும் கைது செய்துள்ளனர். கொள்ளை சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை போலிஸார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“உதயநிதி மோஸ்ட் டேஞ்சரஸ்” என்று எதிரிகள் புலம்புகிறார்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“தமிழ்ப் பெண்களை, வெல்லும் பெண்களாக மாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : முரசொலி புகழாரம்!
-
“நமது மிஷன் 2026 என்ன? ‘திராவிட மாடல் 2.O!’” : கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
சங்கிக் கூட்டத்தால் தமிழ்நாட்டை தொட்டுக்கூட பார்க்க முடியாது : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி!
-
“பா.ஜ.க.வினரின் DNA-வில் வாக்குத் திருட்டு நிறைந்துள்ளது!” : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!