Tamilnadu
பெற்றோரை தீவைத்துக் கொளுத்திய கொடூர மகன்.. அதிர்ச்சியில் உறைந்த கிராமம்: நடந்தது என்ன?
புதுச்சேரி மேல் திருக்காஞ்சி பகுதியைச் சேர்ந்தவர் தட்ஷணாமூர்த்தி. இவரது மனைவி லதா. இந்த தம்பதிக்கு ஜெயகுமார், புகழ் மணி என இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் இரண்டாவது மகன் புகழ்மணி வேன் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவருக்குக் கடந்த ஒரு மாதமாகக் கண் பார்வையில் பிரச்சனை இருந்து வந்ததால் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.
இதையடுத்து, பெற்றோர் லென்ஸ் பொருத்திக் கொண்டு வேலைக்குச் செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளனர். ஆனால் அவர் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.
தொடர்ந்து பெற்றோர்கள் வேலைக்குச் செல்லும் படி கூறி வந்ததால் ஆத்திரமடைந்த புகழ் மணி நேற்று இரவு வீட்டிலிருந்த தலையணையில் தீ வைத்துக் கொளுத்தி அதைப் பெற்றோர்கள் மீது வீசிவிட்டு அவர் தப்பிச் சென்றுள்ளார். இதில் இருவர் மீதும் தீப்பிடித்துள்ளது.
இருவரின் அலறல் சத்தத்தைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது, லதா தீயில் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தொடர்ந்து அப்பகுதி மக்கள் தீயில் எறிந்து கொண்டிருந்த தட்ஷாணா மூர்த்தியை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக மங்கலம் காவல் நிலையத்திற்கு தட்ஷணா மூர்த்தியின் தங்கை அளித்த தகவலின் பேரில் உதவி ஆய்வாளர் சண்முக சத்திய மற்றும் போலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து லதாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு தலைமறைவாக உள்ள புகழ் மணியை போலிஸார் தேடி வருகின்றனர்.
Also Read
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?
-
சென்னை, தரமணியில் தமிழ் அறிவு வளாகம் : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.52 கோடி செலவில் 208 புதிய நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் - திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!