Tamilnadu

Konica Color Lab உரிமையாளர் வீட்டில் நடந்த பகீர் கொள்ளை.. குற்றவாளியை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலிஸ்!

சென்னை வடபழனியை சேர்ந்தவர் சந்தோஷ் குமார். கோனிகா கலர் லேப் உரிமையாளரான இவர் வெளியூர் சென்று நிலையில், கடந்த 28 ம்தேதி வீடு திரும்பிய நிலையில், வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. கொள்ளை சம்பவம் தொடர்பாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனையடுத்து தனிப்படைகள் அமைத்து சிசிடிவி பதிவுகளை வைத்து தீவிரமாக நடத்திய விசாரணையில், தூத்துக்குடியைச் சேர்ந்த முத்து என்பவர் கொள்ளை அடித்தது தெரியவந்தது. இதனையடுத்து முத்துவை கைது செய்த தனிப்படை போலிஸாசார் அவரிடம் இருந்து பணம் மற்றும் நகைகளை பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் இன்று விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கொள்ளை சம்பவம் தொடர்பாக சி.சி.டி.வி பதிவுகளை வைத்து நடத்திய விசாரணையில் முத்து கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

தனி நபராக வீட்டு பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 3 4 சவரன் நகை வெள்ளி பொருட்கள் மற்றும் 42 கிலோ மதிப்புடைய வெள்ளிக்கட்டிகள் மற்றும் 2,22,000 ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளார். முத்துவை கைது செய்து அவரிடமிருந்து 34 சவரன் தங்க நகை,14 லட்சம் மதிப்பிலான வைர மோதிரம், வெள்ளிக்கட்டிகள், வெள்ளிப் பாத்திரங்கள் மற்றும் 62,000 ரொக்க ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர்.

முத்து மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூடுதல் ஆணையர் அன்பு தெரிவித்தார். பெரம்பூர் கொள்ளை தொடர்பாக தலைமறைவு குற்றவாளிகள் இருவரை தீவிரமாக தேடி வருவதாகவும், தங்க நகை கடை உரிமையாளர் சங்கங்களுடன் நகைக்கடை பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.

சிசிடிவி பதிவுகளையும் திருடி செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் சிசிடிவி பதிவுகளை க்ளாவ்டு ஸ்பெசில் சேகரிக்கவும் அதீநுட்ப பாதுகாப்பு வசதிகளை பொருத்தவும் அறிவுறுத்த உள்ளதாக தெரிவித்தார்.

Also Read: விழுப்புரத்தில் தொலைந்து போன பைக்கை 48 மணி நேரத்தில் சென்னையில் மீட்ட போலிஸார்.. குவியும் பாராட்டு!