Tamilnadu
“ஈரோடு இடைத்தேர்தலில் பா.ஜ.க ஏன் போட்டியிடவில்லை ?” : அண்ணாமலையை வெளுத்து வாங்கிய ஆசிரியர் கி.வீரமணி!
திருப்பூர் அரிசி கடை வீதியில் திராவிடர் கழகம் சார்பாக சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில், சமூக நீதியை பாதுகாக்கும் வகையிலான திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது. அதை பொறுத்துக் கொள்ள முடியாத தமிழ்நாட்டில் ஒருபோதும் ஆட்சி அமைக்க முடியாத விரக்தியில் ஒன்றிய அரசு ஏதோதோ செய்து கொண்டுள்ளது.
அதன் காரணமாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் ஆளுநர் மாளிகையில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. சனாதனம் திராவிட மாடலுக்கு எதிரானது. தமிழ்நாட்டில் நாங்கள் வளர்ந்து விட்டோம், நாங்கள்தான் எதிர்க்கட்சி என கூறிக் கொள்ளும் பா.ஜ.க அதனை உறுதிப்படுத்த ஏன் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை.
தங்கள் பலத்தை நிரூபிக்க பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலையே போட்டியிட்டிருக்கலாமே? இதை செய்யாமல் பா.ஜ.க. அ.தி.மு.கவை வைத்து பொம்மலாட்டம் ஆட்டம் ஆடிக் கொண்டிருக்கிறது, அண்ணா திமுகவாக இருந்த அதிமுக தற்போது அடமானதிமுகவாக மாறி உள்ளது.
எண்ணற்ற வாக்குறுதிகளை அளித்த ஒன்றிய பாஜக அரசு அதனை எதுவும் நிறைவேற்றவில்லை. இது குறித்து கேட்டால் ஜூம்லா எல்லாம் சும்மா சொன்னதாக உள்துறை அமைச்சர் பதிலளித்து வருகிறார். சேது சமுத்திரத் திட்டம் அதன் தொடக்க காலத்தில்யே நிறைவேற்றி இருந்தால் ஏராளமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்கும். அதை விடுத்து, நம்பிக்கையின் அடிப்படையில் ராமர் பாலம் இருந்ததாக காரணம் காட்டி, அதனை தொடர்ந்து எதிர்க்கும் பணியை பாஜக செய்து வருகிறது.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
வக்ஃபு சட்டத்தின் முக்கிய பிரிவுகளுக்கு தடை... "மக்கள் நம்பிக்கையை வலுப்படுத்தும்"- முதலமைச்சர் வரவேற்பு!
-
வக்ஃபு சட்டத்தின் முக்கிய பிரிவுகளுக்கு உச்சநீதிமன்றம் தடை... இஸ்லாமிய அமைப்புகள் வரவேற்பு !
-
“பாஜகவிடம் அடிமையாக அதிமுக இருப்பதற்கான காரணம் இதுதான்...” - தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி. பேச்சு!
-
பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைக்கும் ‘அன்புக்கரங்கள்’ திட்டம் - புதிய திட்டத்தின் சிறப்பு என்ன?
-
“இது என்ன, வாக்கரசியலுக்காக செய்வதா?” : ‘அன்புக்கரங்கள்’ திட்ட தொடக்க விழாவில் முதலமைச்சர் பதிலடி!