Tamilnadu

“எவ்வளவு காலம் என தெரியாது.. இருக்கும் காலம் வரை கழகத்திற்கு உழைப்பேன்” : அமைச்சர் துரைமுருகன் உருக்கம் !

சென்னை வில்லிவாக்கத்தில் சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் பேராசிரியர் அவர்களின் நூறாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் இந்து சமய அறநிலையத் துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு முன்னிலையில், வில்லிவாக்கம் மேற்கு பகுதி கழக செயலாளர் 8வது மண்டல குழு தலைவர் கூபி ஜெயின் ஏற்பாட்டில் நடைப்பெற்றது.

இந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க பொதுச்செயலாளர் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் கழக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் எம்.பி ஜெகத்ரட்சகன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், “இந்து சமய அறநலத்துறையில் கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க ஆட்சியில் செய்யாத பல செயல்களை கடந்த ஒன்றரை ஆண்டுகளில் அமைச்சர் சேகர் பாபு செய்துள்ளார். அதுமட்டுமின்றி இந்து சமய அறநலத்துறையில் பல்வேறு கோவிலுக்கு சொந்தமான பல்வேறு சொத்துக்களை மீட்டு அரசிடம் ஒப்படைத்துள்ளார்.

ஆண்டவன் நிலம் அபகரித்தவர்களுக்கே சொந்தம் என்று இருந்த நிலையை மாற்றி கோவில் நிலத்தை மீட்ட பெருமை அமைச்சர் சேகர்பாபுவிற்கு உண்டு. இந்து சமய அறநிலையத்துறை நமக்கு எதிரான துறை இல்லை. பெரிய பெரிய ஆட்கள், சில சாதிக்காரர்கள் கோவில் தங்களுக்கு தான் சொந்தம் என்று சொல்லி கொண்டு இருந்தார்கள். இப்போதும் சிதம்பரம் கோவில் எங்களுக்கு தான் சொந்தம் என்கிறார்கள்.

எடுத்து கொண்ட பொறுப்பை சிறப்பாக செய்ய வேண்டும் என்ற முறையில் சேகர்பாபு சிறப்பாக பணியாற்றுகிறார். தி.மு.க பலமாக இருப்பதற்கு காரணம் இருப்பவர்களையும், இறந்தவர்களையும் பாராட்டுவது தான். உழைத்தவனை, சிறைக்கு சென்றவனை, சித்ரவதை அனுப்பவித்தவனை பாராட்டும் குணம் தி.மு.க.விற்கு உண்டு.

தி.மு.க கட்சியில் படிப்பகம் என பல்வேறு அறிவகம் உள்ளது. இப்படி தி.மு.க விதை உன்றப்பட்ட போதே அதனுடன் உன்றியவர் பேராசிரியர். திராவிட இயக்கத்தின் வரலாறு பற்றி தெரியாமல் இருக்கலாம். ஆனால் அறியாமல் இருக்க கூடாது. இந்த கூட்டத்தின் நோக்கம் என்பது திராவிடத்தின் வரலாற்றை இளைஞருக்கு தெரியபடுத்துவதே.

தமிழன், தமிழ்நாட்டில் மேடையில் தமிழில் பாடுவதை இழுக்கு என்று கருதுகிறான். சட்டசபை கூடுதே என்று அதிமுககாரர் ஒருவரிடம் கேட்டேன். அதற்கு அவரோ அட ஏனே நாங்க எங்க உட்காறதுனே தெரில, இரண்டு நாளில் சட்டசபையை முடிச்சுருங்க என்கிறார்.

ஒண்டறை ஆண்டுகளில் சிறப்பான செயல்களை வைத்து தான் இந்தியாவில் சிறந்த முதல்வராக நமது தலைவரும், சிறந்த மாநிலமாக தமிழ்நாடும் உள்ளது. மழைக்காலங்களில் முதல்வரின் தலைமையில் சிறப்பாக அரசு செயல்பட்டத்தால் இந்த முறை சென்னையில் பெரும்பாலான இடங்களில் மழை நீர் தேங்கவில்லை.

இன்னும் வரக்கூடிய காலங்களில் மேலும் சில நடவடிக்கைகள் மேற்கொண்டு சென்னையில் எங்கும் மழைநீர் தெங்கமால் இருக்கும். எனவே அடுத்த ஆண்டு மழையை பற்றி பொதுமக்கள் கவலைபடாமல் இருக்கலாம். எவன் கட்சிக்கு உழைக்கிறானோ, எவன் பாடுபடுகிறானோ அவன் கட்சியில் இருக்கட்டும். இருக்கிற காலம் இன்னும் எவ்ள்ளவு என்று எனக்கு தெரியாது. ஆனால் இருக்கிற வரை கட்சிக்காக உழைப்பேன். வீட்டுக்கு வருவேனே தவிர வேறொரு வீட்டுக்கு வர மாட்டேன். என் தலைவன் கலைஞர். என் கட்சி தி.மு.க என்றேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: 'டாக்டர் மஸ்தான் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு'.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!