Tamilnadu
பெற்றோர்களே உஷார்.. சாக்லேட் என நினைத்து எலி பேஸ்ட் சாப்பிட்ட 3 வயது குழந்தைக்கு நேர்ந்த துயரம்!
புதுச்சேரி புதுசாரம் வெங்கடேஸ்வரா நகர், இரண்டாவது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் மேரி ரோஸ்லின். இவரது கணவர் தினேஷ்குமார். இவர் கடந்த ஒருவருடத்திற்கு முன்பு இறந்துவிட்டார்.
இதனால் தனது தந்தையுடன் மேரி ரோஸ்லின் வசித்து வருகிறார். மேலும் இவர் தனியார் டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் வேலை செய்து வருகின்றார் இவருக்கு இவரது 3 வயது மகள் தியா என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் கடந்த 11 ம் தேதி வீட்டில் குழந்தை தியா விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு எலி பேஸ்ட் இருந்துள்ளது. இதைப்பார்த்த குழந்தை தியா சாக்லேட் என நினைத்துக் கொண்டு எலி பேஸ்ட்டை கடித்து சாப்பிட்டுள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தாத்தா குழந்தை தியாவை உடனடியாக ராஜீவ்காந்தி அரசு குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். பிறகு மேல் கிச்சைக்காக தியாவை எழும்பூர் குழந்தைகள் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை சேர்த்துள்ளனர்.
இங்குச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குழந்தை தியா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக புதுச்சேரி தன்வந்திரி நகர் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாக்லேட் என நினைத்து எலி பேஸ்டை சாப்பிட்ட 3 வயதுக் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Also Read
-
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
-
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!
-
S.I.R-க்கு எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! : முழு விவரம் உள்ளே!