சினிமா

Oscars 2023 ரேஸில் இடம் பிடித்த RRR படம்.. எந்த பிரிவுக்கு தேர்வாகியுள்ளது என்று தெரியுமா உங்களுக்கு?

ஆர்.ஆர்.ஆர் படம் பல்வேறு விருதுகளைப் பெற்று வரும் நிலையில் ஆஸ்கர் விருது பட்டியலில் ஆர்.ஆர்.ஆர் படம் இடம் பெற்றுள்ளது.

Oscars 2023 ரேஸில் இடம் பிடித்த RRR படம்.. எந்த பிரிவுக்கு தேர்வாகியுள்ளது என்று தெரியுமா உங்களுக்கு?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தெலுங்கில் பிரம்மாண்ட இயக்குநரான எஸ்.எஸ்.ராஜமௌலி, பாகுபலி 1,2 படங்களின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்கிய படம் தான் RRR. கடந்த மார்ச் மாதம் வெளியான இந்த படத்தில் என்டிஆர், ராம்சரண், அலியா பட் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பான் இந்தியா திரைப்படமாக உருவான இப்படம், இந்தியாவில் மட்டுமல்ல உலகளவிலும் மாஸ் ஹிட் கொடுத்தது.

இந்தாண்டு வெளியான சிறந்த இந்திய படங்களில் இந்த படமும் சிறந்த படமாக விளங்கியுள்ளது. ஆந்திராவில் வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களான அல்லூரி சீதா ராமராஜு, தொல்குடிகளின் போராளி கொமரம்பீம் போன்றோரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படம் பல நாடுகளிலும் மொழிபெயர்த்துத் திரையிடப்பட்டது.

Oscars 2023 ரேஸில் இடம் பிடித்த RRR படம்.. எந்த பிரிவுக்கு தேர்வாகியுள்ளது என்று தெரியுமா உங்களுக்கு?

சுமார் 550 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் சுமார் 1,200 கோடி வரை வசூல் சாதனை படைத்துள்ளது. விஜயேந்திர பிரசாத் எழுதிய இப்படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ளார். பல்வேறு விருதுகளை அள்ளிக்குவிக்கும் இப்படம் இந்தாண்டின் சிறந்த படங்கள் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது. இதன் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் இயக்குநர் ராஜமெளலி, இதன் அடுத்த பாகம் விரைவில் உருவாகும் என சமீபத்தில் அறிவித்திருந்தார்.

மேலும் ஆர்.ஆர்.ஆர் படம் பல்வேறு விருதுகளைப் பெற்று வருகிறது. சமீபத்தில் கூட நியூயார்க் பிலிமஸ் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருதையும், எல்.ஏ பிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் விருதுகளையும் இந்த படம் பெற்றது.

Oscars 2023 ரேஸில் இடம் பிடித்த RRR படம்.. எந்த பிரிவுக்கு தேர்வாகியுள்ளது என்று தெரியுமா உங்களுக்கு?

நேற்று கூட அமெரிக்கத் திரைப்பட விழாவில் சிறந்த வெளிநாட்டு மொழிப்படம், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஸ்கோர் என பிரிவுகளில் விருது வென்று சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் 2023ம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுகளுக்கான தேர்வு பட்டியலில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் ஒரிஜினல் பாடல் பிரிவில் இடம்பிடித்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை அடுத்துப் படக்குழுவுக்குப் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories